India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தி.மலை மணலூர்பேட்டை சாலை மேல்புத்தியந்தல் அருகே நேற்று இரவு கார் ஒன்று வேகமாக சென்றது. அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்தது. காரை ஒட்டி சென்ற கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவத்தை சேர்ந்த ஓட்டுநர் படுகாயமடைந்தார். இவ்விபத்து குறித்து தச்சம்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை(ஏப்.29) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திலகர் நகர்,காந்தி நகர்,அத்தை கொண்டான்,இந்திரா நகர், லட்சுமி மில் காலனி மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை மின் தடை ஏற்படும் என கோவில்பட்டி கோட்ட மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

கடையம் தெற்கு ஒன்றியம் வீரா சமுத்திரம் ஊராட்சி மாலிக் நகரில் நகர திமுக சார்பில் பொதுமக்களுக்கு கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாவட்ட, ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மதுரையில் டாஸ்மாக் கடைகள், மனமகிழ் மன்றம், ஓட்டல் பார்கள் என மொத்தம் 300 மது விற்பனை கடைகள் உள்ளன. இங்கு சாதாரண நாட்களில் பீர் விற்பனை சராசரியாக 40,000 பீர் பாட்டில்கள் விற்பனையாகி வந்துள்ளது. இந்நிலையில் சமீப நாட்களாக கோடை வெயிலின் தாக்கல் அதிகரித்து வருவதால் கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் 72,000 பீர் பாட்டில் விற்பனையாகி வருவதாக மதுரை மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் நேற்று மதியம் தனது காரில் மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மேல்மருவத்தூர் அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மக்களவை தொகுதியில் பதிவான மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் ட்ரோன்கள் மற்றும் வான்வழி ஆளில்லா வாகனங்கள் பறக்கவும் தடை விதித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் விற்பனை செய்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த ரிஷப்(18), அபினேஷ்(23), மோன்பாபு (21), சரவணன், பிள்ளைப்பாக்கம் பகுதியை சேர்ந்த அரவிந்தன், கட்சிப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜ் உள்ளிட்ட 10 பேரை ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் பரந்தாமன் அதிரடியாக கைது செய்துள்ளார்.

புதுவைக்கு வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தமிழகத்தை போல்
வெயில் தாக்கமும் இல்லை. இதனால் வெளி மாநிலங் களில் இருந்து புதுவைக்கு வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படுகிறது . சுற்றுலா பயணிகள் வருகை எதிரொலியாக கடற்கரை, பாண்டி மெரினா, ஊசுட்டேரி படகு உள்ளிட்ட ஆன்மிக சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

கள்ளக்குறிச்சி வட்டம்,கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் விபத்தில் இறந்ததைத் தொடர்ந்து வினோத்தின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.தமிழக அரசின் உத்தரவின்படி, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் லூர்துசாமி இன்று (28.04.2024) கொங்கராயபாளையம் கிராமத்தில் உள்ள சிறுவனது வீட்டிற்கு நேரில் சென்று, உடலுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தேனி மாவட்டம் அய்யம்பட்டியில் கோயில் திருவிழாவையொட்டி நேற்று முன் தினம் (ஏப்.26) இரவு ஆடலும், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட தகராறில் கமலேஷ் (18) என்பவரை சுதாகா், அவரது தந்தை பாரதிராஜா உள்ளிட்ட 7 பேர் தாக்கி, கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரில் சின்னமனூர் போலீசார் சுதாகர்,அவரது தந்தை பாரதிராஜாவை நேற்று (ஏப்.27) கைது செய்தனா்.
Sorry, no posts matched your criteria.