Tamilnadu

News April 28, 2024

சிம்ம வாகனத்தில் கங்கையம்மன்

image

காட்பாடி, காங்கேயநல்லூர் பாலாற்றங்கரையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கங்கையம்மன் மிகவும் கருணை நிறைந்த தெய்வமாகும் . இந்த திருத்தலத்தில் 48 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கங்கையம்மன் இரண்டாம் நாள் உற்சவம் மிக சிறப்பாக நேற்று இரவு நடைபெற்றது.இதில் கங்கையம்மன் சிம்ம வாகனத்தில் காட்சியளித்தார்.

News April 28, 2024

விருதுநகர்:விழாவை துவக்கி வைத்த கலெக்டர்

image

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நேற்று மகிழ் 24 என்ற தலைப்பில் நடைபெற்ற கலை மற்றும் இலக்கிய விழாவினை விருதுநகர் கலெக்டர் வீ.ப.ஜெயசீலன், குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர் மகிழ் 24 என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

News April 28, 2024

திருச்சியில் கல்யாண மாலை தொடக்கம்

image

திருச்சி புதிய கலையரங்கத்தில், கல்யாணமாலை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. கடந்த 24 ஆண்டுகளில் 5 லட்சத்திற்கு மேலான திருமணங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ள கல்யாண மாலை நிகழ்ச்சி இன்று காலை 9 மணி முதல், மாலை 7 மணிவரை நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடலாம். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கல்யாணமாலை மோகன். மீரா மோகன், ரமேஷ் ஆகியோர் செய்துள்ளனர். 

News April 28, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு எச்சரிக்கை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (காலை 10 மணி வரை) தூத்துக்குடிமாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News April 28, 2024

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (காலை 10 மணி வரை) கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News April 28, 2024

கள்ளக்குறிச்சி:கஞ்சா விற்பனை;நண்பர்கள் கைது

image

கள்ளக்குறிச்சி நகராட்சி எமப்பேர் பகுதி முரளி(20) என்ற இளைஞர் தனது வீட்டு அருகில் தனது நண்பரான அருகில் உள்ள சின்ன சேலம் வட்டம் பாண்டியன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (27) என்பவரை உடன் வைத்துக்கொண்டு கஞ்சா வியாபாரம் செய்த போது போலீசார் இவர்கள் இருவரையும் பிடித்து இன்று கைது செய்தனர். பின்னர், 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News April 28, 2024

காஞ்சிபுரத்தில் இறையன்பு 

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 50ம் ஆண்டு நிறைவடைந்தது ஒட்டி ஆண்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்,  எழுத்தாளர் கல்வியாளர் பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்ட இறையன்பு, செவிலிமேடு தேவகி வெட்டிங் கன்வென்ஷன் திருமண மண்டபத்தில் இன்று காலை 9.30 மணி அளவில் வருகை புரிய உள்ளார்.

News April 28, 2024

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கோழி விலை உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.87-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ. 92 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல் கறிக்கோழி கிலோ ரூ.119- க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கிலோவுக்கு ரூ.3 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.122 ஆக அதிகரித்துள்ளது.

News April 28, 2024

மாடியிலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

image

களக்காடு புது தெருவை சேர்ந்தவர் யாபேஸ்(43) .இவர் கடந்த 25 ஆம் தேதி இரவு தனது வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தொடர்ந்து நேற்று மாலை உடல்நலக் குறைவு ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 28, 2024

மயிலாடுதுறை:வாழ்த்து பெற்ற நிர்வாகிகள்

image

மயிலாடுதுறை மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் தஞ்சை மண்டல செயலாளர் அய்யப்பன், வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க அய்யாசாமி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன், மாவட்ட தலைவர் சித்தமல்லி பழனிச்சாமி உள்ளிட்ட மயிலாடுதுறை மாவட்ட பாமக நிர்வாகிகள் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததையொட்டி சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

error: Content is protected !!