India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால 2-ம் கட்ட நீச்சல் வகுப்புகள் கடந்த 16-ம் தேதி துவங்கி வரும் 28ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இந்நிலையில் 3-ஆம் கட்ட நீச்சல் வகுப்பு வரும் 30-ம் தேதி முதல் மே மாதம் 12-ம் தேதிவரை நடைபெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் செ. மகேஷ்குமார் தெரிவித்துள்ளாா்.

வாலாஜா தாலுகா அம்மூர் அடுத்த ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் சசிகலா (28). இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை ராணிப்பேட்டை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதற்காக சசிகலா இறந்தார் என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

திருச்சி மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் 72.87 சதவீதமும், திருச்சி மேற்கு தொகுதியில் 61.75 சதவீதமும், திருச்சி கிழக்கு தொகுதியில் 62.46 சதவீதமும், திருவெறும்பூர் தொகுதியில் 66.62 சதவீதமும், கந்தர்வகோட்டை (தனி) சட்டமன்ற தொகுதியில் 73.80 சதவீதமும், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 68.32 என திருச்சி தொகுதியில் 67.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கோம்பை மலைக்கிராமத்தில் முகாமிட 4க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் மயிலம்மா என்ற மூதாட்டியின் விவசாய தோட்டப்பகுதியில் புகுந்து அங்கு பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த பீன்ஸ் போன்றவற்றை சேதப்படுத்தியது. மேலும் வனத்துறையினர் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும், யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ளே உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் இயக்கம் /பயண அட்டை வழங்கும் இடம் உள்ள அலுவலகம் இரவு நேரத்தில் குடிகாரர்களின் கூடாரமாக மாறி வருகிறது, காலையில் பேருந்து நிலையம் வரும் பயணிகள் முகம் சுழிப்போடு செல்கின்றனர் தொடரும் இந்த அவலத்தை தடுத்திட நடவடிக்கை எடுக்குமா காவல்துறை ?நகராட்சி நிர்வாகம்? என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கோவையிலிருந்து பீஹார் மாநிலம், பாருணிக்கு , வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல்.23) சிறப்பு ரயில் (06059) இயக்கபடவுள்ளது. இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக இயக்கப்படுகிறது. அதன்படி, கோவையிலிருந்து (ஏப்ரல்.23) காலை 11.50 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் (ஏப்ரல்.24) மதியம் 2.30 மணிக்கு பாருணி சென்றடையும்.

நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூரை சேர்ந்தவர் மாதவன். நாம் தமிழர் கட்சி நிர்வாகியான இவர், நேற்று இரவு அதே பகுதியில் நடந்து சென்றபோது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராகுல் உள்ளிட்ட 3 போ், மாதவனை வழிமறித்து, தேர்தல் முன்விரோதம் காரணமாக 3 பேரும் மாதவன் மீது தாக்குதல் நடத்தினர். புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார், ராகுல் உள்பட 3 போ் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் இன்று வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இன்று மாலை 3 மணி நிலவரப்படி 117° வெயில் வாட்டி எடுக்கிறது. வயது முதிர்ந்தவர்கள் மதிய நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெயில் தாக்கத்தில் உடலில் நீரிழப்பு அதிகம் இருப்பதால் அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும். குறிப்பாக நீர் மோர், பதநீர், நுங்கு, இளநீர் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.

தாளவாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று மதியம் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது அப்போது, காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பனக்கள்ளி கிராமத்தில் சாலை ஓரத்தில் இருந்த மரம் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அவ்வழியாக வாகனங்கள் எதுவும் சொல்ல முடியாமல் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

கரூர் மாவட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேல், தேர்தல் பொது பார்வையாளர் அசோக் ரெக்காவர் முன்னிலையில் தளவாய் பாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரி வாக்கு என்னும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீலிடப்பட்டது. மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.