India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் காலை 7 மணியில் வாக்குப்பதிவு துவங்கியது. காலை முதல் வாக்குப்பதிவு மந்தமாக காணப்பட்டது. 11 மணி நிலவரப்படி 21.69% சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. மேலும் வாக்குப்பதிவானது மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. மக்கள் தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர்.

நாமக்கல், பள்ளிபாளையம் அருகே உள்ள கோவிந்தம்பாளையம் தொடக்கப் பள்ளியில் உள்ள பூத் எண் 226-ல் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட அதிமுக கழக செயலாளருமான முன்னாள் அமைச்சர் தங்கமணி தனது குடும்பத்துடன் இன்று வந்து வாக்களித்தார். மேலும் காலை முதலே பொதுமக்கள், நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது, மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர் வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில், 9 மணி நிலவரப்படி, 12.88 சதவீதம் ஓட்டு பதிவு என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

சேத்துப்பட்டு அடுத்த மருத்துவாம்பாடி ஆதிதிராவிடர் பகுதியில் சாலை வசதி, சுடுகாட்டு பாதை என அடிப்படை வசதி செய்தி தராததை கண்டித்து நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்து 300க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க செல்லவில்லை.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு சின்ன அயன்குளம் பகுதியில் குடிநீர், சாக்கடை கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. இதனால், வாக்களிக்க செல்ல போவதில்லை எனக்கூறி கருப்பு கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 10 வார்டு பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் பகுதி மக்கள், பரந்தூர் விமான நிலையம் அமைய எதிர்ப்பு தெரிவித்து இன்று தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதை தொடர்ந்து, தேர்தலை புறக்கணித்த மக்களிடம் வீடு வீடாக சென்று அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கடவரஅள்ளி வாக்கு சாவடியில் மக்கள் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தனர். அதனையொட்டி தாசில்தார் மற்றும் காவல்துறை, வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதனால் மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

மக்களவைத் தேர்தல் 2024 முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே நெமிலி கிராமத்தை சேர்ந்த கனராஜ் என்பவர் வாக்களிக்க வாக்குச்சாவடிக்குச் சென்றார். அப்போது அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது வாக்கினை பதிவை செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 24.37% வாக்குகள் பதிவாகியுள்ளன. அந்தவகையில் கரூர் தொகுதியில் மட்டும் 28.88% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விண்ணமங்கலம் 74வது மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டு அரை மணி நேரம் தாமதமாக வாக்கு பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டு, வாக்கு பதிவு நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் வாக்காளர்கள் திரும்பி செல்லும் அவல நிலை ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.