India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சிபுரம் மக்களவைத் தனி தொகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு இன்று துவங்கும் நிலையில், காலை 6 மணி முதல் அனைத்து வாக்கு சாவடிகளிலும் கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு துவங்கியது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் கட்சி முகவர் முன்னிலையில் அலுவலர்கள் மாதிரி வாக்குப்பதிவு சோதனை நடைபெற்றது.

கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக தனியார் விடுதியில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து விடுதியை சோதனை செய்து அங்கு இருந்த 550 மது பாட்டில்களை(750ml) பறிமுதல் செய்த கன்னியாகுமரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் நேற்று குளித்துக் கொண்டிருந்த நபர் ஒருவரது காலில் கண்ணாடி துகள்கள் காலில் பட்டு காயமடைந்தார். உடனடியாக தீயணைப்பு துறை நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான குழு அவரை மீட்டு முதல் உதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

மக்களவைத் தேர்தல் பிரசாரம் முடிந்து இன்று ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் மாநில பெண் நிர்வாகி ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த சாஹின் பாத்திமா, நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பூசப்பாடி கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க கோரியும், அடிப்படை வசதிகள் செய்து தருதல் மற்றும் ஆதிதிராவிட மக்களுக்கு மனைப்பட்டா வழங்காததை கண்டித்தும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி ஏந்தி நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதிகளில் அமைதியற்ற நிலை காணப்படுகிறது.

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 332 வாக்குச்சாவடி மையங்களும், சங்கராபுரத்தில் 300 வாக்குச்சாவடி மையங்களும், ரிஷிவந்தியத்தில் 305 வாக்குச்சாவடி மையங்களும், உளுந்தூர்பேட்டையில் 337 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தமாக மாவட்டத்தில் 1274 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் நான்கு வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்கு சாவடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி ஆட்சியர் அருணா நேற்று கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் 689 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. அதில் 176 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கூடலூர் அருகே ஓவேலி, சேரம்பாடி, எருமாடு ஆகிய பகுதி வாக்குச்சாவடிகளில் போலீசாருடன் வனத்துறையின் காட்டுயானை விரட்டும் குழுவினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலை பகுதியில் உள்ள மீனாட்சிபுரம் வாக்கு பதிவு மையத்துக்கு அலுவலர்கள் இன்று வாக்கு பதிவு இயந்திரத்தை கொண்டு சென்றனர். சுமார் 15 கிலோமீட்டர் மலைப்பாதையில் வாக்கு பதிவு மின்னணு இயந்திரங்களை தலைச் சுமையாக தூக்கிக் கொண்டு நடைபயணமாக சென்ற அதிகாரிகள் பின்னர் அங்குள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை அமைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த படியூர் புது காலனி பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவரது தாத்தா சின்னகுமாரன் வயது 55. இவர் இரவு காங்கேயம் படியூர் நோக்கி அரசு பேருந்தில் பயணம் செய்து படியூர் பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதமாக சிவன் மலை கோவிலுக்கு சொந்தமான வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார்.

கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொலைத் தொடர்பியல் பிரிவு சார்பில் 2023 – 24 ஆம் ஆண்டிற்கான கணினி தொடர்பியல் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சிகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
Sorry, no posts matched your criteria.