Tamilnadu

News April 17, 2024

இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி

image

திருவள்ளூர் நகராட்சியில் மக்களவைத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு நேற்று வாக்காளர் அனைவரும் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் கலந்துகொண்ட இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரபுசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

News April 17, 2024

தீயணைப்பு சார்பில் போலி ஒத்திகை நிகழ்ச்சி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பேருந்து நிலையம், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தீ விபத்து குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போலி ஒத்திகை பயிற்சியை போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் நேற்று (ஏப்.16) செய்து காட்டினர். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

News April 17, 2024

மூன்று மதத்தினரும் பாஜகவிற்கு ஆதரவு: நாகை வேட்பாளர் பேச்சு

image

கீழ்வேளூர் பாஜக ஒன்றிய தலைவர் நிஜந்தன் தலைமையில், நாகை மக்களவை தொகுதியில் போட்டியிடும் எஸ்.ஜி.எம் ரமேஷ் நேற்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கீழ்வேளூர் அடுத்த செருநல்லூர், குருமனாங்குடி, குருக்கத்தி, கூத்தூர், தேவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், “ இந்து மட்டுமின்றி இஸ்லாமியர், கிருஸ்தவர் மக்களிடையே பாஜகவிற்கு மிகுந்த வரவேற்பும் ஆதரவும் உள்ளது” எனக் கூறி வாக்கு சேகரித்தார்.

News April 17, 2024

அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

அரியலூா் அடுத்த கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோயிலில் வருகின்ற ஏப். 25-ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. தேரோட்டத்தையொட்டி ஏப்.25 ஆம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவகங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுசெய்யும் வகையில் மே 4-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று முழுவேலை நாளாக செயல்படும் மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்

News April 17, 2024

சென்னையில் 48 லட்சம் வாக்காளர்கள்

image

வடசென்னை மக்களவை தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் திருவொற்றியூரில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 86 வாக்காளர்களுக்கு 311 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் உள்ள, 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்களுக்கு, 4 ஆயிரத்து 680 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

News April 17, 2024

சிறுபான்மை மக்களை திமுக ஏமாற்றுகிறது-ராஜன் செல்லப்பா

image

மதுரை புறநகர் ஆனையூர் பகுதியில் நேற்று அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, “சிறுபான்மை மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் ஏமாற்றி அவர்களின் வாக்கு வங்கியை மட்டும் பெற்றுக்கொண்டு தொடர்ந்து அவர்களை தி.மு.க. வஞ்சித்து ஏமாற்றி வருகிறது” என விமர்சித்தார்.

News April 17, 2024

தென்காசி: இன்று முக்கிய உத்தரவு

image

தென்காசி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் இன்று தொடங்கி உள்ளனர். வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

News April 17, 2024

விழுப்புரம் அருகே மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது

image

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம், வசந்தகிருஷ்ணாபுரம் பகுதியில் அரகண்டநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நேற்று (ஏப்ரல் 16) ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த கிராமத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் (40) என்ற நபரை கைது செய்து, அவரிடமிருந்து 154 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

News April 17, 2024

மயிலாடுதுறை வாக்காளர்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் , பொதுமக்கள் இத்தேர்தலில் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியரும் , தேர்தல் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி இன்று அறிவித்துள்ளார்.

News April 17, 2024

ஜனநாயகம் தழைக்க மக்களே வாக்களிக்க வாருங்கள்’- கலெக்டர்

image

லாஸ்பேட்டை அவ்வை நகரில் நேற்று வீடு வீடாகச் சென்று  வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வை தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் துவக்கி வைத்து, இரண்டு வீடுகளில் வாக்காளர்களை சந்தித்து, தனது தனிப்பட்ட தேர்தல் திருவிழா அழைப்பினை வழங்கி, தவறாமல் வாக்களிக்குமாறும் மற்றவர்களையும் வாக்களித்திட அறிவுறுத்துமாறும் கேட்டுக் கொண்டார். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!