India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 85 வயதுக்கு மேல் உள்ள வயதானவர்கள் வீட்டிலிருந்து வாக்களிக்க நடைபெற படுத்து உள்ளதால் அதனை தேர்தல் அலுவலருமான மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷரவன் குமார் அவர்கள் விளம்பாவூர் கிராம பகுதியில் இன்று மேற்பார்வையிட்டு வயதானவர் வாக்களிக்கும் முறையை அருகில் இருந்து பார்வையிட்டார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் (13.4.2024) கோவையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகிறார். அதன்படி கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து 10,000 பெண்களுடன் நிர்மலா சீதாராமன், மக்கள் தரிசன யாத்திரை மேற்கொள்கிறார் என இன்று (ஏப்ரல்.11) தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 1122 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பேனா, பென்சில் , கவர் சீல் என மொத்தம் 127 பொருட்கள் அனைத்தும் தயார் படுத்தப்பட்டு 90% சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அதிகாரி வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.

ஈரோடு சூரம்பட்டி திரு.வி.க. வீதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் மக்களவை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக தங்கள் பகுதியில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான், டாஸ்மாக் கடையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.

போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி வரும் தேசிய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு தற்போது, ஜாபர் சாதிக் நண்பரான, புதுவை காங்கிரஸ் பிரமுகர் ஈரம் ராஜேந்திரன் விசாரணைக்கு எதிர்வரும் 14, 15 ஆம் தேதிகளில் டெல்லியில் உள்ள தங்கள் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருப்புவனம் பகுதியை சேர்ந்த வில்வமூர்த்தி (55) மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் முன்னாள் உதவி ஆணையாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அவர் பணி செய்த காலத்தில் கோவில் கணக்கிலிருந்து ரூ.40 லட்சத்தை மற்றொரு தனிநபர் கணக்கிற்கு மாற்றியுள்ளார். இதுகுறித்து தற்போதைய உதவி ஆணையர் குணசேகர்(50) கொடுத்த புகாரின் பெயரில் திருப்புவனம் போலீசார் வில்வமூர்த்தி (55) மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

ஒவ்வொரு முறையும் இந்த மண்ணுக்கு வந்தால் எனக்கு நினைவுக்கு வருவது அண்ணன் வீரபாண்டியார் தான்.
சமுதாயத்திற்கு தலைவராக இந்த மண்ணிலே அவர் வாழ்ந்தார். சேலம் மாவட்டம் வளர்ச்சி பெற வீரபாண்டியார் காரணமாக இருந்திருக்கிறார். தி.மு.க. வீரபாண்டியாரை முற்றிலும் மறந்துவிட்டது’ என்று சேலத்தில் இன்று
நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களின் வாகன சோதனைகளில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் ஒரு கோடியே 32 லட்சத்து 4500 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையில் பட்டு வேட்டி துண்டுகள் மற்றும் ரொக்க பணம் அடங்கும். உரிய ஆவணங்களை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.

விருதுநகர் அருகே சத்திர ரெட்டியாபட்டி சோதனை சாவடியில் இன்று மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு நிலையான கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது பறக்கும் படையினர் சோதனையிடும் பணிகளை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆட்சியரின் ஆய்வால் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக கணினி மூலம் சுழற்சி முறையில் நுண் பார்வையாளர்கள் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.
இதில் தேர்தல் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஏ.கே. கமல்கிஷோர் பணி ஒதுக்கீடு செய்தார்.
Sorry, no posts matched your criteria.