India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று குமரிக்கு வருகை தந்தார். நாகர்கோவில் வேப்பமூடு ஜங்ஷன் பகுதியில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அலைகடலென கலந்து கொண்டனர்.

ஈரோடு, வ.உ.சி பூங்கா பகுதியில், ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த ஆம்னி வேனில் 660 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. ரேஷன் அரிசி கடத்திய சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்து, ரேஷன் அரிசி மற்றும் வேனை பறிமுதல் செய்தனர்.

மக்களவை தேர்தலில் 85வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 40 சதவீதத்திற்கு உள்ள மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தே தபால் ஓட்டு அளிக்கலாம் என, தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி திருப்போரூர் சட்டசபை தொகுதியில், 85 வயதுக்கு மேல் உள்ள முதியோர் 231 பேர், மாற்றுத்திறனாளிகள் 220 பேர் என, 451 பேர் உள்ளனர். அவர்களிடம் தபால் ஓட்டு பெறும் பணி, நடைபெற்ற வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் ரமலான் பெருநாளை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நேற்று நடைபெற்றன. இதில் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சீர்காழி பகுதிக்குட்பட்ட 6 பள்ளி வாசல்களிலும், திருவெண்காட்டில் 2, புதுப்பட்டினத்தில் 3, ஆனைக்காரன் சத்திரத்தில் 7, வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் 2 என மொத்தம் 20 பள்ளிவாசல்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி கோவிலின் கோபுரங்களில் மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் எங்கிருந்து பார்த்தாலும் கோபுரங்கள் மின்னொளியில் ஜொலித்து நிற்கும் ரம்மியமான காட்சிகள் மக்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

பட்டுக்கோட்டையில் நாடியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று நடந்தது. இவ்விழாவில் மாலை 4.40 மணிக்கு பட்டுக்கோட்டை தேரடித்தெருவில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் நாடியம்மன் வீதிவலம் தொடங்கியது. தேரடித்தெரு, வடசேரி ரோடு, பிள்ளையார் கோவில் தெரு வழியாக தேர் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்து வந்தனர்.

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை அம்பேத்கர் திடலில் நேற்று கள்ளக்குறிச்சி தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் ஜெகதீச பாண்டியன், நாமக்கல் தொகுதி வேட்பாளர் கனிமொழி ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கள்ளக்குறிச்சி வேட்பாளர் ஜெகதீசனுக்கு ஆதரவாக பாட்டுப்பாடி ஓட்டு சேகரித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் ரமலான் பண்டிகையையொட்டி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு நேற்று வழங்கப்பட்டன. தமுமுக சாா்பில் ரமலான் பண்டிகையொட்டி செய்யாறு நகர அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரிசி, இறைச்சி, காய்கனிகள், மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 440 பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

சீர்காழி நகர ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் இஸ்லாமிய நல்லிணக்க மையம் சார்பில் ரமலான் பண்டிகையின் முக்கிய நிகழ்வான கூட்டு ஃபித்ரா எனும் ஏழை மக்களுக்கு நோன்பு பெருநாள் உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நகர செயலாளர் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை எளிய 75 குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருள்கள் காய்கறி உள்ளிட்ட உணவு பொருள்கள் வழங்கப்பட்டன.

ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள விவி பேட் இயந்திரத்தில் பெயர், சின்னம் பதிவேற்றம் செய்யும் பணி நேற்று நிறைவடைந்தது. பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் அரை மூடி சீல் வைக்கப்பட்டது. இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பெலிக்ஸ் ராஜா, வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்
Sorry, no posts matched your criteria.