India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கீழ்வேளூர் அருள்மிகு அஞ்சு வட்டத்தம்மன் உடனுறை அட்சய லிங்கசாமி ஆலய தேர் திருவிழா இன்று விமர்சையாக துவங்கியது. முன்னதாக தேரில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சீர்காழி, கீழமாத்தூர் ஊராட்சி குமாரக்குடி கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக இந்ந கிராமத்திற்கு எந்த அடிப்படை வசதிகளும் சரிவர கிடைக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் வருகின்ற மக்களைவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில் தங்கியிருந்த வீட்டில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. நேற்று மாலை சுமார் ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஒரு மணி நேரமாக திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் வீட்டின் உரிமையாளரிடம் இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் ஒரு உத்தரவிட்டுள்ளனர்.

மணப்பாறை திருச்சி மாவட்டம் வளநாடு அருகே உள்ள தோப்புப்பட்டியைச் சேர்ந்தவர் மோகன் ( 50) இவர், நேற்று தனது வீட்டிற்கும் அருகாமையில் வசிக்கும், 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் மணப்பாறை மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், போக்சோ சட்டத்தின் கீழ் மோகன் கைது செய்யப்பட்டார்.

கிளாங்காட்டை சேர்ந்த செந்தில்குமார், இந்து அறநிலையத்துறையில் வேலை வாங்கித் தருவதாக புதுக்கோட்டை வினோத் என்பவரிடம் ரூ.6 லட்சம் வாங்கியுள்ளார். இந்நிலையில் வினோத்குமார் தனது பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்டதால் செந்தில்குமார், அழகு மற்றும் குணா ஆகியோர் சேர்ந்து வினோத்குமாருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரில் காவல் ஆய்வாளர் ஹரிஹரன் விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்தார்.

ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்துக்காக நாகப்பட்டினத்தில் இருந்து 2000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 42 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயில் மூலம் ஈரோடு இரயில் நிலையத்திற்கு நேற்று வந்தது. பின் நெல் மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் இரயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றினர். இந்த நெல் அரவைக்கு அனுப்பப்பட்டு, அரிசியாக்கப்பட்டு ஈரோடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. மேலும், வெப்பநிலையைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக 107.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரி ஆகவும், காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 20 சதவீதமாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற வேட்பாளர் மலையரசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கெங்கவல்லி பேரூராட்சிக்கு வருகை தந்தார். இந்நிலையில், அவரை பார்ப்பதற்காக சேலம், காமக்கபாளையத்தைச் சேர்ந்த தயாநிதி, செல்லதுரை என்பவர்கள் ஆட்டோவில் வந்தனர். அப்போது நாவலூர் ஏரிக்கரை அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் இருவர் பலியாகினர். இதுகுறித்து வீரகனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களவைத் தோ்தல் விதிகள் கடந்த 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக முதல் தளத்தில், 24 மணி நேரமும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை தொலைபேசி மூலமாக 19 புகாா்களும், சி-விஜில் செயலி மூலமாக 7 புகாா்களும் பெறப்பட்டு, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் உடனுக்குடன் தீா்வு காணப்பட்டுள்ளது.

நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சி நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் தேர்தல் பாதுகாப்பு சிறப்பு படை அதிகாரி புவனேஸ்வரி தலைமையில் வாகன சோதனை ஈடுபட்டனர்.
சோதனையின் போது கார், வேன், டெம்போ என அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, பணம், பொருட்கள் எடுத்துச் செல்கின்றனரா என தீவிர சோதனைகளுக்கு பிறகே அனுமதித்தனர்.
Sorry, no posts matched your criteria.