Tamilnadu

News April 10, 2024

திருப்பூரில் வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி

image

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வருகின்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 8 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி இன்று துவங்கியது. ராயபுரத்தில் நடைபெற்று வரும் இந்த பணிகளை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

News April 10, 2024

வேலூர்: ஏ.சி.சண்முகம் முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று (ஏப்.10) பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த நிலையில், ஏ.சி.சண்முகம், மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்ளும் கோட்டை மைதானத்தை இஸ்லாமிய பெருமக்கள் நாளை (ஏப்ரல் 11) ரம்ஜான் திருநாளை முன்னிட்டு தொழுகைக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். இது இஸ்லாமிய மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

News April 10, 2024

நெல்லை: நாளை மின்தடை அறிவிப்பு

image

நெல்லை டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவிலில் தேரோட்டம் நாளை (ஏப்.11) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு டவுன் கரியமாணிக்க பெருமாள் நான்கு ரத வீதிகள், சந்தி பிள்ளையார் கோவில் பகுதி, மேலரத வீதி மேல் பகுதி மட்டும், பாட்டபத்து, மேட்டு தெரு, சொக்கட்டான் தோப்பு ஆகிய பகுதிகளில் 30 நிமிடங்களுக்கு மட்டும் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என நெல்லை மின்வாரியம் இன்று (ஏப்.10) அறிவித்துள்ளது.

News April 10, 2024

நீலகிரியில் அமைச்சர் தேர்தல் பிரச்சாரம்

image

குந்தா தாலுகாவில் பாலகொலா, நுந்தளா, மீக்கேரி, பி.மணியட்டி, சி.மணியட்டி, தங்காடு, ஓரநள்ளி, கன்னேரி மந்தனை, கல்லக்கொரை, குருத்துக்குளி, மேல் கௌஹெட்டி உள்பட 14 கிராமங்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ராமச்சந்தின் சென்றார். அந்த கிராமங்களில் நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

News April 10, 2024

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ஐடி ரெய்டு

image

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவில் வசித்துவருபவர் ஜெயக்குமார், ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 10) காலை முதல் இவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News April 10, 2024

ராமநாதபுரம்: மாணவியை அடித்த ஆசிரியை மீது வழக்கு

image

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 6 வயது மாணவியை பள்ளி ஆசிரியை அடித்ததில் கால் வீக்கமடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவியின் தாயார் லெட்சுமி அளித்த புகாரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் பள்ளி ஆசிரியை ஜெயப்ரியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 10, 2024

கிருஷ்ணகிரி: நடிகை விந்தியா தேர்தல் பிரச்சாரம்

image

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாசை ஆதரித்து நடிகை விந்தியா நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இங்கு பேனாவையே கையில் பிடிக்க முடியவில்லை. டெல்லியில் டைனோசரைப் பிடிக்கிறாராம் என்று கிண்டலாகத் தெரிவித்தார். மேலும், ஆளும் திமுகவை விமர்சித்துப் பேசினார். நிகழ்ச்சியில் விந்தியாவை காண ஏராளமானோர் கூடியிருந்தனர்.

News April 10, 2024

இஸ்லாமியர்களிடம் வாக்கு கேட்ட திமுக, அதிமுக வேட்பாளர்கள்

image

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஏப்.10) கோவை ஆத்துப்பாலம் பள்ளி வாசலில் தொழுகை முடித்துவிட்டு வந்தவர்களிடம், பொள்ளாச்சி தொகுதியின் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி மற்றும் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

News April 10, 2024

பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

image

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 14 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலையூர், காவிரிப்பூம்பட்டினம், வானகிரி உள்ளிட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் மயிலாடுதுறை மாவட்ட காவல் தேர்தல் பார்வைையாளர் ஜன்மே ஜெயாகைலாஷ், மாவட்ட எஸ்பி மீனா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

News April 10, 2024

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

image

குள்ளஞ்சாவடி அடுத்த அகரம் நடுத்தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி. நேற்று முன்தினம் மாலை புதிய பைக் வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார். அப்போது பெரியகாட்டுசாகை மின்துறை அலுவலகம் அருகே நாய் ஒன்று குறுக்கே ஓடியது. இதனால் நாய் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்த கிருஷ்ணமூர்த்தி தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

error: Content is protected !!