Tamilnadu

News April 9, 2024

குமரி: போதை கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி

image

குமரி, தக்கலை அருகே உள்ள வண்டாவிளையை சேர்ந்தவர் ஹரிதாஸ்(58), கொத்தனார். இவரது மனைவி லதா(48). ஹரிதாஸ் மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றும்(ஏப்.8) ஹரிதாஸ் பிரச்னை செய்யவே, ஆத்திரமடைந்த லதா வெந்நீரை அவர் மீது ஊற்றியுள்ளார். இதில் காயமடைந்த ஹரிதாஸ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தக்கலை போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 9, 2024

திருச்சி: ரங்கோலி கோலம் வரைந்து தேர்தல் விழிப்புணர்வு

image

பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு, திருச்சி ரயில் நிலையத்தில் அஞ்சலக ஊழியர்களால் வரையப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சி தலைவருமான பிரதீப் குமார் அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அந்த ரங்கோலி கோலத்தில் “என் வாக்கு என் உரிமை வாக்களிப்போம்”என்ற வாசகமும் இடம்பெற்று இருந்தது.

News April 9, 2024

தென்காசியில் நோன்பு பெருநாள் தர்மம் 

image

தென்காசி நகர தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக நேற்று தென்காசி தமுமுக அலுவலகத்தில் வைத்து 250க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நோன்பு பெருநாள் தர்மம் தென்காசி நகர தலைவர் அபாபில் மைதீன் தலைமையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆதம்பின் ஆசிக் களஞ்சியம்பீர் , சாகுல்ஹமீது, ஜாபர்சரிப் முஸவ்வீர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 9, 2024

புதுகை: வாக்குச்சாவடி அலுவலா்கள் அஞ்சல் வாக்களிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலின்போது வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலா்கள் ஆகிய பணிகளில் பங்கேற்கும் அரசு ஆசிரியா்கள் தங்களின் அஞ்சல் வாக்குகளை ஞாயிற்றுக்கிழமை செலுத்தினா். அலுவலா்களுக்கான முதல் கட்ட தேர்தல் பணிப் பயிற்சி ராணியார் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

News April 9, 2024

தேர்தல் புறக்கணிப்பு பேனரால் பரபரப்பு

image

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஒத்தப்பட்டியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாம்பலாயி அம்மன் கோவில் உள்ளது. இங்கு புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்தது. தனி நபர் ஒருவரால் உயர்நீதிமன்றத்தில் வழக்கின் அடிப்படையில் முற்றிலும் கோவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்து கருப்பு கொடி கட்டி பேனர் வைத்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News April 9, 2024

சென்னை-நெல்லை கோடை விடுமுறை சிறப்பு ரயில்

image

கோடை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை எழும்பூர் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நெல்லை- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஏப்ரல் 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30 ஆகிய வியாழக்கிழமைகளில் நெல்லையில் இருந்து மாலை 06.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும் என மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

News April 9, 2024

மயிலாடுதுறை: காவலர்களுக்கு நீர்மோர் வழங்கல்

image

சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் சீர்காழி காவல் நிலையம் சார்பில் நாகேஸ்வரமுடையார் கோவில் சந்திப்பு கடைவீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் போக்குவரத்து அலுவல் பார்த்த போக்குவரத்து காவலர்கள் ஊர்க்காவல் படையினருக்கு வெயிலின் தாகத்தில் இருந்து காத்துக் கொள்ள சீர்காழி காவல் ஆய்வாளர் சிவகுமார் நீர் மோர் மற்றும் தர்பூசணி பழங்களை இன்று வழங்கினார்.

News April 9, 2024

நெல்லைக்கு வாராந்திர சிறப்பு ரயில் அறிவிப்பு

image

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இன்று (ஏப்.9) அறிவித்துள்ளது. இதன்படி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சென்னை எழும்பூரில் இருந்து வியாழக்கிழமைகளில் மாலை 6.45-க்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30-க்கு திருநெல்வேலிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2024

சென்னை: 4 நாள் டாஸ்மாக் மூடல்!

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்குப்பதிவை முன்னிட்டு, ஏப்ரல் 17,18, 19 ஆகிய தேதிகளில் சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இன்று(ஏப்.9) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News April 9, 2024

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

image

கள்ளக்குறிச்சி சின்னசேலம் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மாற்றுக்கட்சியினர் 20 பேர் இன்று திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி அவர்கள் தலைமையில், என்கே சேகர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். சத்தியமூர்த்தி தலைமையில் கட்சியில் இணைந்த இருபது நபர்களுக்கும் பொன்னாடை போர்த்தி வரவேற்று கட்சியின் உறுதி மொழி படிவத்தை ஏற்றுக் கொண்டு கட்சியில் இணைந்து கொண்டனர்.

error: Content is protected !!