India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி ஆதரித்து எடப்பாடியில் இன்று
உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார் .அப்போது
இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; மனு நீதி பேசும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது பா.ம.க. 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு எதையும் செய்யவில்லை’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

மயிலாடுதுறையில் வனத்துறை சார்பில் இன்று சிறுத்தை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கருப்பூர் அருகே நண்டலாற்றின் அருகில்
சிறுத்தையின் எச்சம் புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் , இதன் மூலம் சிறுத்தையின் நடமாட்டம் எவ்வாறு உள்ளது என்பதனை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து வரைபடங்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகாசியிலிருந்து நேற்று இரவு தீப்பெட்டி பண்டல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை திருச்சி- துவரங்குறிச்சி அருகே வந்தபோது, லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்களில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. தகவலின் பேரில் துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

தர்மபுரி நான்கு ரோட்டில் அமைந்துள்ள உழவர் சந்தையில் கடந்த சில நாட்களாக பூண்டு வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ பூண்டு ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை நிலவரப்படி ஒரு கிலோ பூண்டு ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 100% வாக்களிக்க வேண்டும் என்பதற்காக (SVEEP-Systematic Voters Education and Electoral Participation) பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் பச்சையப்பன் பெண்கள் கல்லூரியில் மாணவியர்கள் கோலங்கள் வரைந்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

உதகையில் மே மாதம் சீசனை முன்னிட்டு அரசு தாவரவியல் பூங்காவில் பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. பூங்காவில் 14 ஏக்கர் அழகிய பசுமையான புல் வெளிகளில் மண் கொட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது சிடிசி குளத்தை சுற்றிலும் பணிகள் நடைபெறுகின்றன. ஒரு வாரத்தில் பணிகள் முடிவடையும் . தினமும் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது .

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இன்று (ஏப். 9) தெலுங்கு பேசும் மக்கள் ஏராளமானோர் குவிந்தனர். தெலுங்கு பேசும் மக்களின் வருட பிறப்பு நாளான யுகாதி திருநாளை முன்னிட்டு இன்று நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அப்போது அதிகாலை முதலே ஏராளமான தெலுங்கர்கள் திரண்டு சுவாமி வந்து தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் தெலுங்கு வருட பிறப்பு தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

கடலூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பள பாக்கி உடனே வழங்க வேண்டும், எங்களுக்கு இஎஸ்ஐ மற்றும் பி.எப் பிடித்தம் செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார்.மாவட்டச் செயலாளர் சௌந்தர்ராஜன் முன்னிலை வகித்தார்.

வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவல் அலுவலர்களாக பணியில் பங்கேற்கும் முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் விருப்பம் உள்ளவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் விருப்ப மனுக்களை வழங்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இன்று (ஏப்ரல் 9) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.இதில் எம்எல்ஏ ஐயப்பன் மாநகர மேயர் சுந்தரி ராஜா திமுக மாநகர செயலாளர் ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் துறை மாநகர துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மத்திய அரசை அவர் கடுமையாக சாடினார்.
Sorry, no posts matched your criteria.