India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகர்கோவில் கோட்டார் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில், நேற்று(ஏப்.7) போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, PWD ரோட்டில் வைத்து வேர் கிளம்பி ஊரை சேர்ந்த ரகு ராஜ் என்பவரின் வாகனத்தை சோதனை செய்தபோது, அவரிடம் 3-1/2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கான முதல்கட்ட தேர்தல் பணிப் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நேற்று தொடங்கி வைத்தார். இதில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலெட்சுமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) எஸ்.வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்கள் அஞ்சல் வாக்குகளை வாக்குப்பெட்டியில் செலுத்தினர்.

திருநெல்வேலி மாவட்ட அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் வருகிற 24ஆம் தேதி பாளையங்கோட்டையில் தொடங்குகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஒருங்கிணைப்பாளர் சேவியர் ஜோதி சற்குணம் தலைமையில் நேற்று (ஏப்ரல் 7) மாலை நடைபெற்றது. 27 விதமான விளையாட்டு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. முன்னதாக பெரியதுரை வரவேற்றார்.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் மரு கே.பி ராமலிங்கம் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நாமக்கல்லில் “ரோடு ஷோ” மூலம் வாக்கு சேகரிக்கிறார். இதற்காக டிஐஜி உமா தலைமையில் நேற்று இப்பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன் உடன் இருந்தார்.

பூந்தமல்லி, மதுரவாயல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மதுரவாயல் போலீசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, மதுரவாயல் காவல் ஆய்வாளர் பூபதிராஜ் தலைமையில் போலீசார் நேற்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர், இந்நிலையில் மதுரவாயல் பகுதியை சேர்ந்த ராஜ்குமார், பிரசாந்த், அசோக் ஆகிய 3 பேரை போலீசார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் மிகவும் சிறப்புமிக்கது. இந்த மாதத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் 30 நாட்கள் உணவு உண்ணாமல் தங்களது இறை நம்பிக்கையையும் ஈகை குணத்தையும் வெளிக்காட்டுவர், அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் மேல் கூடலூர் நூருல் இஸ்லாம் பள்ளிவாசல் கமிட்டி சார்பாக மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாகிகள், கிறிஸ்தவ ஆலய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய 2024-25 நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியினை வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தினால் 5 % ஊக்கத் தொகை பெறலாம் எனவும், பொதுமக்கள் சிரமமின்றி வரி செலுத்த ஏதுவாக நகராட்சி கணிணி வரிவசூல் மையத்திலும் நகராட்சி இணைய தள முகவரியிலும் செலுத்தலாம் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 10,473 அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. ஒவ்வொரு தொகுதிக்கும் கூடுதலாக 20 சதவீத ஊழியா்கள், இருப்பு அலுவலா்களாக தோ்வு செய்யப்பட்டனா். வாக்குப்பதிவு நாளில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், தபால் வாக்குச் சீட்டு உள்பட அனைத்து விதமான படிவங்களை நிறைவு செய்வதற்கான பயிற்சிகள், மாதிரி வாக்குச்சாவடி அமைத்து விளக்கமளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 18 வயதிற்கு கீழ் உள்ள இளைஞர்கள், சிறுவர்கள் அதிகமாக ஒலி எழுப்பும் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் காவல்துறையினர் உரிமம் இல்லாத இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கடந்த ஒரு வாரமாக மக்களைச் சந்தித்து திமுகவினருடன் இணைந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, டிஜிட்டல் முறையிலும் விசிகவை அதிகளவில் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, கியூஆர் குறியீடு மூலம் அந்தக் கட்சி சார்பில் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.