India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <

மயிலாடுதுறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு துப்பறியும் மற்றும் அகற்றும் படையினர், காவலர்கள் ரயில்வே நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க நேற்று சோதனை மேற்கொண்டனர். சந்தேகப்படும் வகையில் யாரேனும் பொது இடங்களில் சென்றாலும் அல்லது தங்கியிருந்தாலும் 8438456100 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளா்களுக்கு பூத் சிலீப் வழங்கப்பட்டு வருகிறது. பழனி தொகுதியில் 1,13,769,ஒட்டன்சத்திரம் தொகுதியில் 59598, ஆத்தூா் தொகுதியில் 91980, நிலக்கோட்டை தொகுதியில் 90185, நத்தம் தொகுதியில் 73068, திண்டுக்கல் தொகுதியில் 92658, வேடசந்துாா் தொகுதியில் 61654 என கடந்த 3 நாட்களாக மொத்தம் 5.82 லட்சம் பூத் சிலீப் வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அறையில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட உள்ளது. இந்த பாதுகாப்பு அறையை நேற்று மாலை கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மதுரையைச் சேர்ந்த காஞ்சனா(60). இவர் தனது மகன் தினேஷ் உடன் நேற்று காரில் செங்கல்பட்டு சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். விராலிமலை அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவே தடுப்பு கட்டையில் மோதி பலத்த காயமடைந்த காஞ்சனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தினேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விராலிமலை போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மண்டல தரநிர்ணய ஆணைய அறிவியல் ஆய்வு இணை இயக்குநர்கள் அறிவழகன் தலைமையிலான அலுவலர்கள் போலி ஹால்மார்க் நகைகள் குறித்து நேற்று மதுரை, தேனியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், தேனி பகவதியம்மன் கோயில் தெருவிலுள்ள நகைக்கடை ஒன்றில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு விற்பனைக்கு வைத்திருந்த 3 கிலோ 880 கிராம் தங்க நகைகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

பெரியகண்ணமங்கலத்தில் இயற்கை விவசாயிகள் சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 86-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு டெல்டா இயற்கை விவசாயி பிரபு, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மணி, சேகல் இயற்கை விவசாயி இளஞ்செழியன் ஆகியோர் நம்மாழ்வாரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், பொதுமக்களுக்கு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இனிப்புகள் வழங்கப்பட்டன.

கோவை கரும்புக்கடை பூங்கா நகர் மஸ்ஜிதுல் பள்ளிவாசலில் பாரதமாதா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கௌரிசங்கர் தலைமையில் நேற்று மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காது கேளாத, வாய் பேச இயலாத, பார்வை மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், மாவு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் என்று காரைக்கால் மாவட்டத்தில் வீடு வீடாக நேரடியாக சென்று அவர்களிடம் தபால் வாக்கினை பெரும் பணி துவங்கிய நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நிரவி – திருப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 104 வயதான மூதாட்டி தபால் மூலம் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்.

தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் வட்டம், திருப்பாலத்துறை ஸ்ரீ தவள வெண்ணகை அம்மன் உடனுறை ஸ்ரீ பாலைவனநாதா் கோயிலில் பங்குனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு நேற்று(ஏப்.6) மாலை நடைபெற்றது. இதையொட்டி மூலவா் ஸ்ரீ பாலைவனநாதா், தவளவெண்ணகை அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து நந்தியெம்பெருமானுக்கு மங்களப் பொருள்களால் அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.