India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிறிஸ்துவ ஆலயங்கள், முஸ்லிம் ஜமாத்தார்கள் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகளிடம் இந்திய கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவு கேட்டு ப.சிதம்பரம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் பேசுகையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஜிஎஸ்டி வரி மாற்றி அமைத்து குறைக்கப்படும். ஏழை மக்களிடம் வரி வசூல் செய்யப்படுகிறது இந்த அரசு எனவும் தெரிவித்தார்.

சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர் புறப்படும் மின்சார ரெயில்கள் சுமார் அரைமணி நேரம் தாமதமாக புறப்படுகின்றன. கடந்த ஒரு வாரமாகவே ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இது தொடர்பாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தாலும் கண்டு கொள்வதில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) திட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10.04.2024.

வரும் ஏப்ரல்.19 ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்காக திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர் தங்கபாபு எழுதிய “ஊரு ஜனமெல்லாம் கேட்டுக்கோங்க ” என்ற விழிப்புணர்வு பாடல் மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டது. இதனையொட்டி இன்று ஆட்சியர் சாரு ஸ்ரீ ஆசிரியர் தங்கபாபுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V.கிரண் ஸ்ருதி உத்தரவின்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றவாளி ஆகாஷ் (22) (தந்தை பெயர் ஆனந்தன்) என்பவரை இன்று ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையினர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சியில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தொட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில், கோடையின் கடுமையான வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், வரும் நாட்களில் 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கனிமொழியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தூத்துக்குடி மாவட்டம் வந்தார். கோவில்பட்டி எல்லையில் அவருக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு மாசி மாத பிரதோஷம் மற்றும் அம்மாவாசை முன்னிட்டு இன்று ஏப்ரல் 6 முதல் 9ஆம் தேதி வரை வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இதையடுத்து இன்று பிரதோஷத்தை முன்னிட்டு காலை முதலே திரளான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். இதில் மலைக் கோயிலில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இடையார்பாளையம் நீரோடையில் படகு குழாம் அமைக்க தனியார் நிறுவனத்தினர் விதிகளை மீறி மணல் அள்ளியதாக அப்பகுதி மக்கள் தவளக்குப்பம் போலீசில் புகாரளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் போலீசார் மற்றும் தனியார் படகு குழாமை கண்டித்து மணி என்ற வாலிபர் அதே பகுதியில் உள்ள வாட்டர் டேங்க் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். தகவலறிந்த தவளக்குப்பம் போலீசார் சமாதானம் செய்து கீழே இறங்க செய்தனர்.

மயிலாடுதுறையில் 3 நாட்களாக நகர்புற பகுதியில் ஊலா வரும் சிறுத்தையைப் பிடிக்க 3 கூண்டுகள் அமைத்தும், சிறுத்தை சிக்காததால் பதற்றம் அதிகரித்துள்ளது. தற்போது சிறுத்தையைப் பிடிக்க கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் நாகநாதன் வருகைப் புரிந்துள்ளார். மேலும் சிறுத்தை தென்பட்ட பகுதிகளில் 8 மோப்ப நாய்களுடன் அதிகாரிகள் கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.