India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோட்டில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் அதிகாரிகளுடன் தேர்தல் பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தல்
பொது பார்வையாளர் ராஜீவ் ராஜன் மீனா இ.ஆ.ப, காவல் பார்வையாளர் ராம் கிருஷ்ணா சவார்க்கர் இ.கா.ப, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் இ.கா.ப மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

பாரதிய ஜனதா கட்சியின் 44 ஆவது ஸ்தாபக தினம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அலங்கரிக்கப்பட்ட பாரதமாதா படத்திற்கு புஷ்பாஞ்சலி செய்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் கட்சி கொடி ஏற்றப்படவில்லை. இதில் மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் தொகுதியில் 15,978 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 1,122 பேர் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர். இதேபோல் 85 வயது நிரம்பிய 14,035 மூத்த வாக்காளர்களில் 1,184 பேர் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர். இவா்களிடம் தபால் வாக்குகள் பெறும் பணி நேற்று முன்தினம்(ஏப்.5) முதல் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் இருக்கிறதா என்பது குறித்து பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவு சோதனைகள் நடைபெற்றது. இந்த சோதனையானது வரும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை முன்னிட்டு கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள கோயிலில் நேற்று இரவு மோப்பநாய் படை மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படை பிரிவினர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனை நடத்தினர்.

கடம்பத்தூர் மேற்கு ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில் இன்று திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்லை ஆதரித்து சமோசா விற்று வாக்குகள் சேகரித்தார் திருத்தணி எம்எல்ஏ சந்திரன். உடன் ஒன்றிய செயலாளர் ரமேஷ் உட்பட கூட்டணி கட்சியின் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

அரியலூர் ஒன்றியத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களை சிதம்பரம் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்னா அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் பயன்படுத்தக்கூடிய சாய்வு தளங்கள் சரியாக இல்லாத இடங்களில் அவற்றை விரைவாக சரிசெய்திட வேண்டும், குடிநீர் மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை நகரம், காந்திநகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து இளைஞர்களிடையே நடைபெற்ற வாலிபால் போட்டியினை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் நேற்று (06.04.2024) தொடங்கி வைத்து இளைஞர்களுடன் வாலிபால் விளையாடினார்.

கொடைக்கானல் கவுஞ்சி மலைக்கிராமத்தில் 12 வருடத்திற்கு ஒரு முறை பங்குனி உத்திர பெருவிழா கொண்டாடப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று மஞ்சு விரட்டு நடைபெற்றது. விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் கிராம மக்கள் நோய் நொடியின்றி வாழவும் சிறப்பு பூஜை நடைபெற்றது. மஞ்சு விரட்டில் உழவு மாடுகள் பயன்படுத்தப்பட்டு மாடுகளுக்கு இணையாக இளைஞர்கள் ஓடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பர்கூர் ஒன்றியம் பாகம் எண் 190ல் இருக்கும் வாக்காளர்களுக்கு வருகின்ற 19.04.24 அன்று நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் சிலிப்புகளை BLO அலுவலர் மருதுராஜன் நேற்று ராம்நகர் செவத்தான் கொட்டாய் தாடிகாரன் கொட்டாய் பள்ளகொள்ளை ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கு சென்று வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.