India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் I.N.D.I.A கட்சிகள் சார்பில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்த அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று(ஏப்.6) இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி ஆலோசனைகள் வழங்கினார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

புதுகையில் I.N.D.I.A கூட்டணியின் திருச்சி எம்பி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து நேற்று திருமுருகன் காந்தி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன் ஆகியோர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை நகரில் அண்ணாசிலை, புதிய பேருந்து நிலையம் மற்றும் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியிலும் நேற்று அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்ட அளவிலான 18வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் கபடி போட்டி நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களில் 9, 10 மற்றும் 11 ஆகிய தினங்களில் வட்டார அளவில் கபடி போட்டி நடைபெற உள்ளது. எனவே ஆர்வம் உள்ள வீரர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, கலைஞர் அறிவாலயத்தில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரும் , திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளருமான நா. புகழேந்தி மறைவை தொடர்ந்து நேற்று அவரது உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் மரியாதை செலுத்தினார்.

அமமுக பொதுச் செயலாளர் TTV தினகரனின் ஆணைக்கிணங்க மாநில MGR மன்ற இணைச் செயலாளரும், முன்னாள் நகர மன்ற உறுப்பினருமான சேவல். நித்யானந்தம் தலைமையில் நேற்று மாலை நெல்லூர் பேட்டையில், வேலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் ஏசி சண்முகத்தை ஆதரித்து வாக்குகள் சேகரிக்கப்பட்டது. அப்போது நகர, மாவட்ட சார்பு அணி, நகர சார்பு அணி மற்றும் வார்டு கழக நிர்வாகிகள் என பலர் உடன் இருந்தனர்.

ஆண்டிபட்டி உழவர் சந்தையில் 100% வாக்களிப்பினை உறுதி செய்யும் விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வீ.ஷஜீவனா அறிவுறுத்தலின்படி நேற்று நடைபெற்றது. தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பிரபா ஆலோசனை படி உதவி அலுவலர் பால்பாண்டி மற்றும் விவசாயிகள்,வியாபாரிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டு தேர்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கேயம் சட்டப்பேரவை தொகுதியில் நேற்று மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் இந்திய கூட்டணியில் உள்ள கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஈரோட்டில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் அதிகாரிகளுடன் தேர்தல் பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தல்
பொது பார்வையாளர் ராஜீவ் ராஜன் மீனா இ.ஆ.ப, காவல் பார்வையாளர் ராம் கிருஷ்ணா சவார்க்கர் இ.கா.ப, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் இ.கா.ப மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

பாரதிய ஜனதா கட்சியின் 44 ஆவது ஸ்தாபக தினம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அலங்கரிக்கப்பட்ட பாரதமாதா படத்திற்கு புஷ்பாஞ்சலி செய்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் கட்சி கொடி ஏற்றப்படவில்லை. இதில் மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் தொகுதியில் 15,978 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 1,122 பேர் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர். இதேபோல் 85 வயது நிரம்பிய 14,035 மூத்த வாக்காளர்களில் 1,184 பேர் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர். இவா்களிடம் தபால் வாக்குகள் பெறும் பணி நேற்று முன்தினம்(ஏப்.5) முதல் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.