Tamilnadu

News March 22, 2024

மாரியம்மாளின் படத்திற்கு திமுக வேட்பாளர் மரியாதை

image

தென்காசி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் மருத்துவர் ராணிஸ்ரீ குமார் வைகோவின் தாயார் மாரியம்மாளின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.     தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் இல.சுதாபாலசுப்பிரமணியன், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் இராஜா, குருவிகுளம் ஒன்றிய பெருந்தலைவர் விஜயலட்சுமி கனகராஜ், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

News March 22, 2024

யானை வாகனத்தில் பெருமாள் பவனி

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவிலில் நேற்று இரவு பங்குனி உத்திர விழாவின் ஆறாம் நாள் யானை வாகனத்தில் ரங்கநாத பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மேலும் வெண்பட்டு உடையில் இராஜ அலங்காரத்தில் அமர்ந்தவாறு மங்கல வாத்தியங்கள் முழங்க திருவீதியுலா வந்தார். பக்தர்கள் தீபாராதனை காட்டி தங்களது வேண்டுதலை வெளிப்படுத்தினர்.

News March 22, 2024

திருநெல்வேலி: இரவில் போலீசார் வாகன சோதனை

image

மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருநெல்வேலி மாநகர பகுதியில் போலீசார் இரவு நேர வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். நேற்று (மார்ச் 21) நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நெல்லை சந்திப்பு அண்ணா சிலை அருகே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் வாகனங்களை நிறுத்தி தேர்தல் விதிமீறல்கள் உள்ளனவா என சோதனை செய்தனர். இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

News March 22, 2024

திருவள்ளூர்: போலீஸ்-கட்சி நிர்வாகிகள் ஆலோசனை

image

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு கூட்டு சாலைகள் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் கிரியா சக்தி தலைமையில் நேற்று இரவு அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News March 22, 2024

ராம்நாடு: அதிமுக எம்பி வேட்பாளருக்கு வரவேற்பு

image

இராமநாதபுரம் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் நேற்று (மார்ச் 21) ராமநாதபுரம் வருகைபுரிந்தார். அவருக்கு மாவட்ட எல்லையில் மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமையில் வரவேற்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் கே.ஆர்.சுரேஷ் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, மணிகண்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

News March 22, 2024

புதுக்கோட்டையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து அனுப்பும் பணி!

image

புதுக்கோட்டை ஆட்சியரக வளாகத்திலுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தின் பாதுகாப்பு வைப்பறையில் நேற்று மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் கருவி (விவிபேட்) ஒதுக்கீடு செய்து பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது. இதில் அங்கிகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News March 22, 2024

பேரளம் சிவன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

image

பேரளம் தருமையாதீனத்திறகுச் சொந்தமான ஸ்ரீ பவானியம்மன் சமேத ஸ்ரீ சுயம்புநாதஸ்வாமி திருக்கோயிலில் பங்குனி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று சிவன் மற்றும் அம்பிகைக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் தருமையாதீனம் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதலையும் தொடங்கி வைத்தார். 

News March 22, 2024

ரூ.65.90 லட்சம் பறிமுதல்

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆலங்காயம் பகுதிகளில் நேற்று மாலை 6 மணியளவில் தேர்தல் பறக்கும் படை சோதனையின் போது உரிய ஆவணமின்றி ஏடிஎம் வாகனம் மற்றும் இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.65.90 லட்சம் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

News March 22, 2024

1.1/2 தங்க நகை பறித்த வாலிபர் கைது

image

திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 1.1/2 பவுன் தங்க நகையை பறித்த கதிரியன்குளம் பகுதியை சேர்ந்த பிச்சை தேவர் மகன் ராஜசேகர் (38) என்பவரை நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார் நேற்று(நேற்று) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 22, 2024

கிருஷ்ணகிரியில் தேர்தல் அலுவலகம் திறப்பு

image

திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அலுவலகத்திற்கான பந்தல்கால் நடும் பணியை கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும், பா்கூா் எம்எல்ஏவுமான தே.மதியழகன் தலைமை தாங்கி நேற்று (மார்ச் 21) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக, காங். கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!