Tamilnadu

News May 7, 2024

முத்துப்பேட்டை ஆண்கள் பள்ளி 67.5% தேர்ச்சி

image

முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வில் 67.5 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 68பேர் தேர்வு எழுதி இருந்தநிலையில் 46மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் அப்துல் ரஹ்மான் (509) முதலிடமும், மாணவர் ஹரிஹரன் (508) இரண்டாமிடமும், மாணவர் கண்ணன் (475) மூன்றாமிடமும் பெற்றனர். முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் விஜயகுமார் பாராட்டினார்

News May 7, 2024

திருப்பூர்: 55 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துளிர் விட்ட நட்பு

image

திருப்பூர் மாவட்டம், குமரலிங்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1969-74 வரை 55 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், மதுரை மற்றும் டில்லி, ஹைதராபாத் பகுதிகளிலிருந்தும் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். 55 ஆண்டுகளுக்கு முன் கற்பித்த ஆசிரியர்களும், தற்போது வயது முதிர்ந்த நிலையிலும், இந்த சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று மகிழ்ந்தனர்.

News May 7, 2024

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் கைது

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மலையம்மன் கோயில் பின்புறம் இன்று இரு சக்கர வாகனத்தில் கஞ்சா வைத்துக் கொண்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த வி.புதூர் கிராமத்தைச் சேர்ந்த மூவேந்திரன் என்பவரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய சித்தலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூவேந்திரன் இடமிருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News May 7, 2024

விவசாயிகளுக்கு அரசு பேருந்தில் இலவசம்

image

பெரம்பலூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள விவசாயிகள் அவர்களுடைய விளைநிலங்களில் உற்பத்தி செய்த காய்கறிகளை பெரம்பலூர் நகர் பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு எடுத்து வருவதற்கு அரசு பேருந்துகளை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு மாவட்ட வேளாண்மை விற்பனை (ம) வணிகம் துறையால் அடையாள அட்டை வழங்கப்படுகிறது என உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் தெரிவித்துள்ளார்

News May 7, 2024

சந்தனக்கூடு திருவிழா மே 9ல் ஆரம்பம்

image

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலக பிரசித்தி பெற்ற மஹான் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் அடக்கமாகி உள்ளார். இந்த தர்ஹாவில் வருடந்தோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு என்னும் திருவிழா பெரும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த வருடத்தின் 850ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் விழா மே 9இல் தொடங்குகிறது.

News May 6, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 92.28% தேர்ச்சி

image

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 92.28% தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 85.30% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 93.76% தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ஆம் தேதி முதல் அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

News May 6, 2024

சேலத்தில் வெளுத்து வாங்கும் வெயில்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று (மே.6) மாவட்டத்தில் அதிகபட்சமாக 105.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News May 6, 2024

திருவண்ணாமலை தேர்ச்சி சதவீதம்

image

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே.06) வெளியாகியுள்ளது. அதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 90.47 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று, தமிழகத்தில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. திருவண்ணாமலையில் மொத்தம் 26,551 பேர் தேர்வெழுதிய நிலையில், 24,021 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 93.90 சதவீதமும், மாணவர்கள் 86.74 சதவீதமும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

News May 6, 2024

பரந்தூரில் : 650 வது நாளாக இரவு நேரத்தில் போராட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெருமந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பரந்தூர், ஏகனாபுரம், உள்ளிட்ட 13 கிராமமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைவதை எதிர்த்து 650 வது நாளாக இன்று இரவு நேரத்தில் நெற்றியில் நாமம் போட்டுக் கொண்டு மத்திய மாநில அரசை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News May 6, 2024

பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை- கலெக்டரிடம் மனு

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கர்நாடக மாநிலத்தை சார்ந்த பாலியல் குற்றவாளி பாராளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை கோரி மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவி டாக்டர் நிரோஷா மனு கொடுத்தார். அப்பொழுது மாவட்ட பொதுச்செயலாளர் அன்பு வே.வீரமணி நன்னிலம் வட்டார தலைவர் வெங்கடேசன் மாநில எஸ்சி துறை மாநில செயலாளர் கிஷோர், நகர காங்கிரஸ் பொதுச்செயலாளர் பவன் குருமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!