Tamilnadu

News May 16, 2024

ஒசூரில் தார் சாலை அமைக்கும் பணி ஆய்வு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி 40ஆவது வார்டிற்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவரும், 40வது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் பார்வதி அவர்களின் கணவருமான M.நாகராஜ் அவர்கள் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News May 16, 2024

உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்

image

திருவாரூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் 15/5/24 அன்று திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் புகழேந்தி தலைமை வகித்தார். திட்ட அலுவலர் பிரபாகரன் மற்றும் மாவட்ட கருத்தாளர்கள் பயிற்சி அளித்தனர்.

News May 16, 2024

திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

image

திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (19), பூவிழி (19) ஆகியோர் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்துள்ளனர். இதற்கிடையில் பூவிழிக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்த நிலையில், அவர் சந்தோஷுடன் திருவள்ளூரில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டு எஸ்.பி அலுவலகத்தில் நேற்று இருவரும் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் இரு வீட்டாரையும் சமாதானப்படுத்தி பூவிழியை, சந்தோஷுடன் அனுப்பி வைத்தனர்.

News May 16, 2024

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் கண்டன அறிக்கை

image

புதுச்சேரியை ஆளும் என்ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு பொறுப்பேற்றது முதல் அனைத்து துறையிலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. அரசு துறைகளில் எந்த பணிகளாக இருந்தாலும், மக்கள் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்ற நிலை உள்ளது இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என புதுவை மாநில அதிமுக துணை செயலாளர்,வையாபுரி மணிகண்டன் இன்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News May 16, 2024

ரேஷன் கடைகளில் பாமாயில் தட்டுப்பாடு

image

நாகை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த ஒரு மாதமாக பாமாயில் விற்பது இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வெளி சந்தையில் அதிக விலை கொடுத்து பாமாயில் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. டெண்டர் விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பாமாயில் விநியோகத்தில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

News May 16, 2024

கள்ளக்குறிச்சி: உபகரணங்கள் வழங்கிய அதிகாரி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள, உளுந்தூர்பேட்டை துணை மின் நிலையத்தில் மின் வாரிய களப் பணியாளர்களுக்கு தென்மேற்கு பருவ மழைக்கால முன்னெச்சரிக்கையாக கையுறை, கயிறு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை இன்று (மே.16) தமிழ்நாடு மின்வாரிய உளுந்தூர்பேட்டை செயற்பொறியாளர் சிவராமன் அய்யம்பெருமாள் வழங்கினார்.

News May 16, 2024

கோவை : ஜூன் 10ல் கொப்பரை கொள்முதல் நிறைவு

image

கோவை மாவட்டத்தில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக கொப்பரை கொள்முதல் நடைபெறுகிறது. 31500 மெட்ரிக் டன் கொப்பரை, 800 மெட்ரிக் டன் பந்து கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 10ஆம் தேதி கொப்பரை கொள்முதல் நிறைவு பெறுகிறது. விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.

News May 16, 2024

300 ஆண்டுகள் பழமையான மரம் சாய்ந்தது!

image

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான அரசமரம் இருந்தது. மரத்தின் அடியே விநாயகர் சிலை வைத்து ஊர் மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று(மே 15) பெய்த கனமழை காரணமாக மரம் இன்று(மே 16) மரம் சரிந்து விழுந்தது. பழமை வாய்ந்த மரம் சாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News May 16, 2024

சுற்றுலா பயணிகள் குறைந்ததற்கு காரணம் என்ன?

image

கோடை விழா என்றாலே கோத்தகிரி, ஊட்டி, குன்னூர், கூடலூரில் உள்ள பூங்காக்களில் பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். வழக்கத்துக்கு மாறாக இந்தாண்டு உதகையில் மலர் கண்காட்சி 10 நாட்கள் நடைபெறுகிறது. இ-பாஸ், தங்கும் விடுதி, கட்டணம் உயர்வு, முறையான பார்க்கிங் வசதி உள்பட எந்த வசதிகளும் செய்யாத காரணத்தால் இந்தாண்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

News May 16, 2024

சேலம் வீரர், வீராங்கனைகள் சாதனை

image

சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மாநில கிக்பாக்சிங் போட்டி நடந்தது. இதில் சேலம் மாவட்டம் சார்பில் அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கத்தை சேர்ந்த 28 பேர் கலந்து கொண்டனர். இதில் 8 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலப்பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகள் சாதனை படைத்தனர்.
தங்கப்பதக்கம் வென்ற வீரர்கள் வருகிற 2-1ந்தேதி புனேயில் நடைபெறும் தேசிய போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

error: Content is protected !!