India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து போதை ஊசிகள், கஞ்சா விற்பனை செய்வதாக நசரத்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போதை ஊசிகள், கஞ்சா விற்பனை செய்த செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த சூர்யா (29), சந்தோஷ் (21), தூத்துக்குடியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் (21), சூர்யா (21) மற்றும் 17 வயதுடைய 3 சிறுவர்களை நேற்று (மே 6) அதிரடியாக கைதுசெய்தனர்.

மொடக்குறிச்சி அடுத்த துய்யம்பூந்துறை ஊராட்சியில் உள்ள மாதேஸ்வரன் நகர் பகுதியில், நான் உங்களுடன் உங்கள் எம்.எல்.ஏ எனும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களை, மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ சரஸ்வதி நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின் பொது மக்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெற்றார்.

கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் நேற்று கடலூர் 38 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 39 டிகிரி செல்சியஸ், புவனகிரி 39 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 39 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 41 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 42 டிகிரி செல்சியஸ், பண்ருட்டி 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறிஞ்சிப்பாடியில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கன்னியாகுமரியை பூர்வீகமாகக் கொண்ட மாணவி கோகிலா மதுரை சோலையழகுபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் வசித்துக்கொண்டு 12ம் வகுப்பு தேர்வு எழுதினார். தந்தையை இழந்தும், சுயநினைவை இழந்த தாயை பராமரித்து வந்த மாணவி கோகிலா 4 பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்தும் 600-க்கு 573 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். தாய்க்கு தாயாக இருந்து ஏழ்மை நிலையிலும் சாதித்த மாணவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

நெல்லை டவுன் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (53). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றபோது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். நேற்று சந்திப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகருக்கு வல்லநாடு ஆற்று படுகையில் இருந்து தூத்துக்குடி ராஜாஜி பூங்கா நீரேற்று நிலையத்திற்கு நீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு இந்த நீரேற்று நிலையத்தை மாநகராட்சி மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் சீரான முறையில் குடிநீர் வழங்கவும், குடிநீர் விநியோகத்தில் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்திடவும் அறிவுரைகளை வழங்கினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தி.மலை மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தி.மலை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் கடும் வறட்சி ஏற்பட்டு பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குடிநீா்த் தட்டுப்பாடும், கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது .எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் நகரவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற 144 மாணவிகள் நேற்று வெளியான +2 தேர்வு முடிவில் 144 பேருமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் வர்ஷினி 567 மதிப்பெண்களும், அர்ச்சனா 553 மதிப்பெண்களும், சூர்யா 534 மதிப்பெண்களும், ஆயிஷா அஸ்மிதா 528 மதிப்பெண்களும், பிரதீக்ஷா 525 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி தொடர்ந்து 6வது ஆண்டாக 100% தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வில் 67.5 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 68பேர் தேர்வு எழுதி இருந்தநிலையில் 46மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் அப்துல் ரஹ்மான் (509) முதலிடமும், மாணவர் ஹரிஹரன் (508) இரண்டாமிடமும், மாணவர் கண்ணன் (475) மூன்றாமிடமும் பெற்றனர். முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் விஜயகுமார் பாராட்டினார்

திருப்பூர் மாவட்டம், குமரலிங்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1969-74 வரை 55 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், மதுரை மற்றும் டில்லி, ஹைதராபாத் பகுதிகளிலிருந்தும் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். 55 ஆண்டுகளுக்கு முன் கற்பித்த ஆசிரியர்களும், தற்போது வயது முதிர்ந்த நிலையிலும், இந்த சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று மகிழ்ந்தனர்.
Sorry, no posts matched your criteria.