India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக குவாரிகளின் நடைபெற்ற ஆய்வில் 5 பாறைகளில் உரிமங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் செயல்படும் குவாரிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.சட்ட விதிகளை மீறி செயல்படும் வாரிசு குத்தகைதாரர்களின் மீது தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளின்படி அபராத நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்

அவினாசி ஒன்றியம் தெக்கலூரை சேர்ந்தவர் கந்தசாமி (58). இவர் தெக்கலூரில் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.இந்த நிலையில் இவர் நேற்று மாலை காரில் அவினாசி சென்று விட்டு தெக்கலூர் திரும்பினார்.அவினாசி ஆட்டையாம்பாளையம் அருகே கார் சென்ற போது அப்பகுதியில் இருந்த வேகத்தடையின் மீது ஏறியது.அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் மோதியதில் உயரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு, வெயிலின் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் வெயிலின் தாக்கத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லாலங்குடி ஐ.டி காலணியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுத்தி சுற்றித்திரிந்தார். இதை பார்த்த போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

சீலையம்பட்டி முல்லைப் பெரியாற்றின் கரையோரத்தில் ஆண் சடலம் கிடப்பதாக சின்னமனூா் போலீஸாருக்கு நேற்று (மே.5) தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸாா் அவரது உடலை மீட்டு நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவா் சீலையம்பட்டியை சேர்ந்த முனியப்பன் என்பதும், அவரை அவரது சித்தப்பா மலைராஜா, அவரது மகன் பவுன்ராஜா ஆகியோர் அடுத்து கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருவாரூர். , திருத்துறைப்பூண்டி நன்னிலம் கூத்தாநல்லூர் ஆகிய பகுதிகளில் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர www.tngasa.in இனைய முகவரியில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இனைய வழியில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் கல்லூரியில் செயல்படும் சேர்க்கை உதவி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

விருகாவூர் மாரியம்மன் கோவில் அருகே 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரத்தின் அருகே வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகள் ஓய்வெடுப்பது வழக்கம் அந்த வகையில் நேற்றூ டிராவலர்ஸ் மற்றும் கார் என இரண்டு வாகனங்கள் ஆலமரம் அருகே நிறுத்திவிட்டு அங்குள்ள கட்டையில் வாகன ஓட்டையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர் திடீரென ஆலமரம் வேரோடு டிராவலர்ஸ் மற்றும் கார் மீது சாய்ந்து விபத்துக்குள்ளானது.

தென்னிந்திய கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது. இதற்கு “கள்ளக்கடல்”என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன்படி இன்றுதூத்துக்குடி மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு வரை நீடிக்கும் எனவும், 5 அடி முதல் 7 அடிவரை கடல் அலை சீற்றத்துடன் காணப்படும் என இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது. இதற்கு “கள்ளக்கடல்”என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன்படி இன்று கடலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு வரை நீடிக்கும் எனவும், 5 அடி முதல் 7 அடிவரை கடல் அலை சீற்றத்துடன் காணப்படும் என இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது. இதற்கு “கள்ளக்கடல்”என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன்படி இன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு வரை நீடிக்கும் எனவும், 5 அடி முதல் 7 அடிவரை கடல் அலை சீற்றத்துடன் காணப்படும் என இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.