India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாநகா், மேலூா், திருமங்கலம், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தட்டுப்பாடு ஏற்படாதவாறு, சீரான குடிநீா் விநியோகம் நடைபெறுவதை உள்ளாட்சித் துறை அலுவலா்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் மே 1ஆம் தேதி 110.48 டிகிரி பாரன் ஹீட் வெயில் பதிவானது. பின்னர் மே 2இல் அதிக அளவாக 111.2 டிகிரி பாரன் ஹீட் வெயில் பதிவானது. இந்நிலையில், நேற்று 110.48 டிகிரி பாரன் ஹீட் வெயில் பதிவானது. இன்று அக்னி வெயில் தொடங்குவதால் மக்கள் மேலும் கவலையடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று(மே – 03) மாவட்டத்தில் அதிகபட்சமாக 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளிவர உள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. வள்ளியூர் மற்றும் பாளையில் உள்ள 2 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றது. அனைத்து விடைத்தாள்கள் நேற்று திருத்தி முடிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் சுமார் 800 ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

தருமபுரி நான்கு ரோடு பழைய தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து போக்குவரத்து காவலர்கள் நேற்று(மே 3) தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஸ்டேட் வங்கி முன்பு போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 30 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

காஞ்சிபுரம் சங்கர மட வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கர ஸ்ரீ அனுக்கை கணபதி ஸ்ரீ சுரேஷ்வராச்சாரியார் சந்திதி ஆகியவற்றுக்கு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் நேற்று(மே 3) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த 3 சந்நிதிகளுக்கும் வர்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பா பிஷேகத்தையொட்டி காலை பூஜைகள், அனுக்கை விக்னேஸ்வா பூஜையுடன் தொடங்கியது.

குமரி அருகே கொல்லங்கோடு சூழால் சோதனைச் சாவடியில் போலீசார் நேற்று(மே 3) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டாரஸ் லாரி ஒன்று எம்-சாண்ட் மணல் ஏற்றிக் கொண்டு கேரளம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தியதில், ஜல்லிகள் ஏற்றிச் செல்வதற்கான அனுமதி பெற்று எம்-சாண்ட் கடத்தியது தெரியவந்தது. லாரி ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் லாரியை பறிமுதல் செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள், வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
” தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது மிகவும் மோசமான செயலாகும். மீண்டும் நரேந்திர மோடி தான் மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராவாா் . மாற்றங்களுக்குத் தயாராவோம் ” என்றாா்.

வெம்பக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 120 ஏக்கரில் கேந்தி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மானவாரி நிலங்களில் கிணற்றுப் பாசனத்தை நம்பி பயிரிடப்பட்டது. கிணற்றில் தண்ணீர் வற்றியதன் காரணமாகவும் தொடர் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக கேந்தி பூச்செடிகள் வாடி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தண்டையார்பேட்டை பகுதியில் கணவரை பிரிந்த நந்தினி என்ற பெண், மணிகண்டன் என்பவரோடு 4 வருடமாக வாழ்ந்து வந்துள்ளார். மணிகண்டனுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றதால், நேற்று(மே 3) அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது நந்தினி தனக்குதானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதில் 70% காயத்தோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.