India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41வது வணிகர் தினம் , வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரை வளையங்குளம், நான்குவழிச்சாலையில் 5ம் தேதி (நாளை) நடக்கிறது. மாநாட்டு திடலை நேற்று பார்வையிட்ட மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வணிகர் தினத்தை முன்னிட்டு, நாளைய தினம் தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக நேற்று தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவு தேர்வு நாளை (மே 5) நடைபெறுகிறது. இதற்காக நெல்லை மண்டலத்தில் 14 மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்களில் மொத்தம் 7441 பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர். அதிகபட்சமாக வண்ணாரப்பேட்டை எப்.எக்ஸ் . பொறியியல் கல்லூரி மையத்தில் மட்டும் 960 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

தேனியில் யூ-ட்யூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். யூ டியூபர் சவுக்கு சங்கரை கைது செய்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சவுக்கு சங்கரை கோவைக்கு அழைத்து செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாண் இயக்குனர் ஆறுமுகம், மதுரை கோட்டத்திற்கு 2022-23, 2023-24ம் ஆண்டுகளில் 350 பஸ்கள் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் 137 புதிய பஸ்கள் இயங்கி வருகின்றன. காலாவதியான 85 பஸ்கள் கழிக்கப்பட்டன . மேலும் 213 பஸ்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் பயன்பாட்டிற்கு வரும். மதுரை நகருக்கான 133 தாழ்தள பஸ்களும் தயாராகின்றன. பஸ்கள் படிப்படியாக கழிக்கப்படும்” என்று கூறினார்

சென்னை அரசு போக்குவரத்து பேருந்துகளின் பழுதுபடுதல் குறித்து வெளியாகும் செய்திகளுக்கு சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் விளக்கமளித்துள்ளது. அதில், பழுதுகள், விபத்தில்லாத பேருந்து இயக்கத்தை இலக்காக கொண்டு செயல்படுகிறோம். கொரோனா காலத்தில் நிதி நெருக்கடி காரணமாக புதிய பேருந்துகளை வாங்க இயலவில்லை. தற்போது அனைத்து அரசு பேருந்துகளிலும் பழுதுகள் சரி செய்யப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊட்டியிலிருந்து கோத்தகிரி வழியாக வந்த சென்னை பெரம்பூரை சேர்ந்த சுற்றுலா வாகனம் குஞ்சப்பனை காட்சிமுனை அருகே பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில் சிறுவர், சிறுமியர் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 30 பேர் பயணித்தனர். காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்/ சமூக ஆர்வலர்கள் விரைந்து செயல்பட்டது அனைவரது பாராட்டுதலையும் பெற்றது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி கடந்த பல மாதங்களாக நடைபெற்றுவருகிறது. இதுவரை இந்த இரு வழிச்சாலையை தற்போது நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்த நெடுஞ்சாலை ஓரங்களில் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. எனவே காங்கேயம் கரூர் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

அரக்கோணம் அருகே ஆளில்லாத ரயில் பாதையைக் கடக்க முயன்ற சிற்றுந்து மீது ரயில் மோதிய விபத்தில் 9 கிராம நிா்வாக அலுவலா்கள் உள்பட 11 போ் உயிரிழந்தனா்.
இந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வேலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.1 கோடியே 44 லட்சத்து 97 ஆயிரத்து 551, அதற்கான வட்டி, வழக்கிற்கான மொத்த செலவு ஆகியவற்றுடன் சோ்த்து வழங்க உத்தரவிடப்பட்டது.

நேற்று தேனி மாவட்டம்
கம்பத்தில் இறைவி சம்ஸ்கிருதி நுன்கலைப்பள்ளி சார்பாக திருநாவுக்கரசர் குருபூஜை விழா, சதங்கை விழா நடைபெற்றது.
விழாவில் மதுரை ஆதினம்
293வது பீடாதிபதி பூஜனீய ஸ்ரீலஸ்ரீஹரிஹர ஞானசம்பந்ததேசிக பரமாச்சாரியசுவாமிகள்
கலந்துகொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் மாவட்ட நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பாம்பன் ரயில்வே பாலம் கட்டுமான பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்தது. இதுகுறித்து நேற்று செய்தி அறிக்கை வெளியிட்டுள்ள மதுரை கோட்டம், நவீன வசதிகளுடன் ரூ. 550 கோடியில் புதிய பாலம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், புதிய பாம்பன் பாலம் பயன்பாட்டுக்கு வந்தவுடன் புதிய ரயில்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.