India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றை அடுத்த நாட்டேரி கிராமத்தில் கோடைகால விழிப்புணா்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மருத்துவா் யோகேஸ்வரன் தலைமை வகித்து பேசியதாவது, வெப்ப அலையில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக உடலில் நீர்ச் சத்து குறையாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும் பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டுள்ள ஏலகிரி மலை. 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட ஏலகிரி மலை வாசஸ்தலமாகும் . மரங்கள் அழிப்பதாக ஏலகிரி மாலையிலும் 104 டிகிரி வெப்பநிலை அதிகரித்துள்ளது.

திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சிநேகவல்லி அம்மன் கோவிலின் உப கோவிலான ஸ்ரீ அறம்வளர்த்த பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 5ஆம் திருநாளையொட்டி பிடாரி அம்மன் செங்காளி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை முத்துக்குமார் பட்டர் செய்திருந்தார்.

புழல் துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக இன்று (மே 4) காலை 9 மணி முதல் 12 மணிவரை புழல், சூரப்பட்டு, விநாயகபுரம், செங்குன்றம் புழல் சிறைச்சாலை மற்றும் குடியிருப்பு பகுதி, நாகப்பா எஸ்டேட், காவாங்கரை, காந்திசாலை, சக்திவேல் நகர், கண்ணப்ப சாமி நகர், மகாவீர் கார்டன், திருநீலகண்டன் நகர் உள்ளிட்ட இடங்களில் மின்விநியோகம் இருக்காது என மின்சாரத்துறை அறிவித்துள்ளது.

தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் சந்திர பாடி ஊராட்சியில் மதகடி தெரு குளத்தினை இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குளத்தில் நிலத்தடி நீர் மாற்றங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.

மதுரை SDPI கட்சியின் வழக்கறிஞர் சமீர் திருமண நிகழ்விற்கான அழைப்பிதழை அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூவிடம் நேற்று நேரில் சந்தித்து வழங்கினார். இந்நிகழ்வில் SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மணவெளி பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பஞ்சபாண்டவர் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த தருணம். மேலும் இந்த தீமிதி திருவிழாவில் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட காந்திகிராமத்தை அடுத்த திண்ணப்பா நகரில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஶ்ரீ கருப்பண்ணசாமி சப்த கன்னிமார்கள் சுவாமி ஆலயத்தின் 12ஆம் ஆண்டு நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கி 05 ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெறுவதையொட்டி திரளான பக்தர்கள் பங்கேற்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

கோடைக்காலத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள பல்லாவரம் வட்டம் கீழ்கட்டளை ஏரியில் இன்று மாலை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு நீர் இருப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்து விளக்கம் அளித்தனர்.

நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நீடாமங்கலத்தில் பத்மஸ்ரீ ராமன் தலைமையிலும் துணைத் தலைவர் ராஜேந்திரன் பொருளாளர் ரவிச்சந்திரன் முன்னிலையிலும் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் புவி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கத்தில் நீடாமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் மரங்களை நட்டு வளர்க்க தீர்மானிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.