India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் வர்த்தக அணித் தலைவர் வேல்பாண்டி இன்று (மே.3) காலை காலமானார். மதுரை மாநகர் பகுதியை சேர்ந்த இவர், கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிதம்பரம் அருகே வீரநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், தொழிலாளி. இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் சிதம்பரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே நக்கல கோட்டையில் கடந்த 30 ஆம் தேதி நடைபெற்ற ஒரு பெண்ணின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் காயமடைந்தனர். இதனை ஒரு தொலைக்காட்சி இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கொலை செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சைபர் கிரைம் குற்றவாளிகளை பொதுமக்கள் அடையாளம் கண்டு கவனமாக செயல்பட வேண்டும் என நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார். மேலும், பரவலாக சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகிறது. போதிய விழிப்புணர்வு இல்லாமல் இதுபோன்ற குற்றவாளிகளிடம் ஏமாந்து விடுகின்றனர். அவர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னிமலை பகுதியில் உள்ள பழக்கடைகளில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ப.நீலமேகம், சென்னிமலை பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 90 கிலோ மாம்பழங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களை உணவு மாதிரி எடுத்து அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

அரியலூர் மாவட்டம் திருமானூரைச் சேர்ந்தவர் சாவித்திரி. இவர் தனியார் கடையில் வாங்கிய டி.வி. ஒரு சில நாட்களில் அது பழுதானதாக அந்நிறுவனம் மீது அரியலூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த குறைதீர் ஆணைய தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையிலான குழுவினர் டி.வி. தொகையுடன் சேர்த்து ரூ.10 ஆயிரம் இழப்பீடும் மேலும் வட்டியுடன் சேர்த்து வழக்கு செலவும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் புதிய முதல்வராக ஜார்ஜ் அமலரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதே கல்லூரியில் 36 ஆண்டுகளாக கணினி அறிவியல் துறை இணை பேராசிரியராகவும், துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். புதிய முதல்வராக நியமிக்கப்பட்ட ஜார்ஜ் அமலரத்தினத்திற்கு கல்லூரியின் செயலாளரும் தாளாளருமான டாக்டர் ஏ கே காஜா நஜிமுதீன், பொருளாளர் எம்ஜிஆர் ஜமால் முகமது ஆகியோர் நேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

தேனி அருகே மதுராபுரி காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஜக்கன். இவர் தேனி – பெரியகுளம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது மதுராபுரி விலக்கு அருகே பெரியகுளத்திலிருந்து தேனி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜீப் ஜக்கன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். அல்லிநகரம் போலீசார் நேற்று (மே.2) வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மயிலாடுதுறை, சேண்டிருப்பு கிராமத்தில் புகழ்வாய்ந்த சுயம்பு முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சித்திரை பால்குட திருவிழா இன்று நடைபெற்றது. இதில் கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் குத்தாலம் காவிரி கரையில் இருந்து சுமார் 10,000 பால்குடங்கள், அலகு காவடி, கூண்டு காவடிகளை சுமந்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மலர்கண்காட்சி வருகின்ற மே 10ஆம் தேதி தொடங்கி மே 20 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. ஊட்டி மலர்கள் காட்சியை கண்டு களிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள். இதனை கருத்தில் கொண்டு கோவையில் இருந்து ஊட்டிக்கு நாளை முதல் 25 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என இன்று (மே.03) போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.