India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காடு படகு இல்லத்தில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான 2 அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதி, முதல் தளம் திறந்த வெளி, மேல்தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் 200 பேரைத் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு இந்த உணவகம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலூர் அருகே கீழவளவு ஊராட்சியில் உள்ள குழிச்சேவல்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி அனிதா தம்பதியரின் மூன்றரை வயது குழந்தை தர்ஷன். இக்குழந்தை இன்று வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை விழுந்தது. சிறிது நேரம் கழித்த தாய் குழந்தை தேடிய போது குழந்தை தொட்டி நீரில் விழுந்து பலியானது தெரிந்தது.

காரைக்கால் மக்கள் நலக்கழகம் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் மணிகண்டனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்கு அவசிய மற்றும் அவசர தேவையான மாஸ்டர் பிளான் பணியை விரைந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை வேண்டுகிறோம் காரைக்கால் ரயில் நிலையத்திற்கு காரைக்கால் அம்மையார் பெயரை சூட்ட மத்திய ரெயில்வே துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் குரு பரிகார ஸ்தலமான முன்னூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பிரகன் நாயகி சமேத ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி முன்னிட்டு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். தட்சணாமூர்த்தி மேற்கு திசை நோக்கி அமைந்திருப்பது தனி சிறப்பு.

வேலூர் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் வழங்கப்படும் கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (மே1) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நித்தியானந்தம் உட்பட பலர் உடனிருந்தனர்.

நீலகிரி வரையாடுகள் அழிவின் விளிம்பை எட்டி வருகின்றன. இவைகளை பாதுகாத்து இன விருத்தியை அதிகப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு நீலகிரி வரையாடு மேம்பாடு திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இவைகளின் கணக்கெடுப்பு இன்று (மே 1) 3 வது நாளாக நடைப்பெற்று வருகிறது. ட்ரோன் கருவி மூலம் புகைப் படம், வீடியோ எடுக்கப்பட்டு வருகிறது.

உலக புத்தக தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட நூலக ஆணைக்குழு,
ராமேஸ்வரம் கிளை நூலக வாசகர் வட்டம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மதுரை கிளை சார்பில் புத்தகக் கண்காட்சி ராமேஸ்வரம் அரசு பஸ் பணி மனை அருகே நாளை ( மே 2)
துவங்குகிறது. மே 10 வரை தினமும் காலை 9:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் இடம்பெறும் புத்தகங்களை வாங்கும் வாசகருக்கு 10% சிறப்பு தள்ளுபடி அளிக்கப்பட உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சி பகுதியில் உள்ள பழமையான கோவிலான வீரபாண்டீஸ்வரர், லட்சுமி நரசிம்மர் கோயிலை இந்து அறநிலையத்துறை சார்பில் புனரமைத்து கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலை இன்று ஆய்வு செய்தனர். இதில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் எலுமிச்சைபழத்தின் வரத்து குறைவால், விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.60-க்கு விற்ற எலுமிச்சைப்பழம், தற்போது விளைச்சார் குறைவால் கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில் மார்ச் 1 முதல் நேற்று ஏப்ரல் 30 வரையிலான கோடை காலத்தில் தமிழ்நாட்டில் மிக அதிகமான மழை நெல்லை மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 212 மிமீ மழையும் மாஞ்சோலையில் 209 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
மே மாதத்திலும் மாஞ்சோலையில் அதிக மழை பெய்யும் என நெல்லை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா இன்று (மே 1) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.