India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே 1) தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் (8 மணி வரை ) திருவண்ணாமலையில், இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதால், வெயிலின் தாக்கம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியும், வழுக்கலான ரோடுகளாகவும் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே.01) தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் (7 மணி வரை) திருப்பத்தூரில் , இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதால், வெயிலின் தாக்கம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியும், வழுக்கலான ரோடுகளாகவும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து. இவருக்கு ஈரோட்டை சேர்ந்த குருதேவ் என்பவர் மூலம் ராஜேஷ்குமார் (36) என்ற நபர் அறிமுகமானார். சென்னை தலைமைச் செயலகத்தில்
மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருகிறேன் எனக் கூறி, அங்கமுத்துவிடம் ரூ.16.50 லட்சத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவானார். அங்கமுத்து அளித்த புகாரின் பேரில் போலீசார் ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள திமுக தலைமை அலுவலகம் அருகே ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் ஆர்.வினோத் காந்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டார்.

பழனி அடிவாரத்தில் உள்ள 8 வார்டுகளுக்கு கோடைகால நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கம் காரணமாக நீர்த்தேக்கத்தில் தண்ணீர் குறைந்து போனது. பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் லாக்கி இருந்து நீர்தேக்கத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என மார்க் கம்யூனிஸ்ட் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் சர்வீஸ் ட்ரஸ்ட்
Ln. ஸ்மைல் ஆனந்த் ஏற்பாட்டில் இன்று (மே 1) கண் தானம் வழங்கப்பட்டது.
திண்டிவனம் நல்லியகோடன் நகர் உமாபதி தெரு விரிவாக்கத்தில்
வசித்து வந்த
சென்னம்மாள் என்பவர் இயற்கை எய்தியதை தொடர்ந்து,
அம்மையாரின் கண்கள்
பார்வை குறைபாடுள்ள நாலு நபர்கள் பயன்பெறும் வகையில் புதுவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கண் தானமாக வழங்கப்பட்டது.

ஆம்பூர் அடுத்த மேல்சணாங்குப்பம் பகுதியில் கடந்த சில தினங்களாக ஊராட்சி மன்ற சார்பில் குடிநீர் சீராக வழங்கவில்லை. பல முறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு குடிநீர் முறையாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆத்தங்குடி அரண்மனை சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடி ஊரில் அமைந்துள்ளது. காரைக்குடி, பள்ளத்தூர், ஆத்தங்குடி, கோதமங்களம் பகுதிகளில் பிரபலமான செட்டிநாடு வீடுகள் உள்ளன. அரண்மனை போல அமைந்திருக்கும் இந்த வீடுகள், இறக்குமதி செய்யப்பட்ட உயர் வகை மரங்கள், மற்றும் கண்ணாடிகள் பயன்படுத்தி மிகுந்த வேலைபாட்டுகளுடன் காட்சியளிக்கிறது. இவை 80 முதல் 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், புதுப்பொலிவுன் நிற்கிறது.

பெரம்பலூர், குரும்பலூர் கிராமத்தில் (ஏப்.30) நேற்று திட்டக்குடி JSA வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் குழுவாக ஊரக வேளாண்மை பயிற்சியின் ஓர் பகுதியாக நெற்பயிருக்கு ஊட்டச்சத்து கரைசல் எவ்வாறு தயார் செய்து பயிர்களுக்கு பயன்படுத்த வேண்டும் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த உற்பத்தியைப் பெருக்க விவசாயிகளுடன் வயல்களில் செயல்முறை செய்து பயிற்சி மேற்கொண்டு களப்பணி செய்தனர்.

தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருபவர் கன்னியாகுமரியை சேர்ந்த வினிஷா(24). திருமணமாகாத இவருக்கு, உசிலம்பட்டியை சேர்ந்த செல்வமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கர்ப்பமாகி உள்ளார். இந்நிலையில் 7 மாதமாகி குறை பிரசவத்தில், தனக்குத் தானே பிரசவம் பார்த்து அதனை கொலை செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மாம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.