India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று(மே 1) விடுமுறை என்பதால் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிறு அட்டவணையின்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அத்துடன், பயணிகள் முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அக்னி பாத் திட்டத்தில் ராணுவத்தில் அக்னி வீரர்களாக சேருவதற்கான எழுத்துத்தேர்வு ஆன்லைனில் நடைபெற்றது. வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் நேற்று (ஏப்ரல் 30) நடந்த தேர்வில் 400 பேர் கலந்து கொண்டனர். தேர்வு அறைக்குள் செல்வதற்கு முன்பு தேர்வாளர்கள் பலத்த சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர். மின்னணு சாதன பொருட்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் ஊராட்சி சிங்கா நோடை காழியப்பநல்லூர் ஊராட்சி அனந்தமங்கலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு காய்கறி சாகுபடிகள் செய்துள்ளனர்.கத்தரி,வெண்டை,புடலை,பீர்க்கங்காய்,கொத்தவரங்காய்,மிளகாய்,பாகற்காய் என பல வகை காய்கறிகள் சாகுபடி செய்துள்ள நிலையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் செடிகள் இலைகள் உதிர்ந்து கருகும் அபாயம்.

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்படி நெல்லை மாநகரில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் “ஸ்டிராமிங் ஆபரேஷன்” என்ற பெயரில் போலீசார் நேற்று (ஏப்ரல் 30) காலை முதல் இரவு வரை தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு போக்குவரத்து விதி மீறல்கள், பொதுமக்களுக்கு தொந்தரவு செய்தல் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டு ஒரே நாளில் 730 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கடலூர் மத்திய சிறையில் விசாரணை (ம) தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று தலைமை காவலர், மோப்ப நாயுடன் சிறை வளாகத்தில் சோதனை ஈடுபட்டனர். அப்போது சிறை பள்ளிக்கு பின்புறம் மரத்தின்கீழ் 20 கிராம் கஞ்சா பொட்டலமாக கட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது . இதையடுத்து சிறை காவலர்கள் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். புகாரின் பேரில் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

தென்காசி மாவட்டத்தில் மே, ஜூன் மாதங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏதும் இருந்தால் பொதுமக்கள் அதற்கான கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலக தொலைபேசி எண் 04633 295891 மற்றும் 8148230 265 என்று தொலைபேசி எண்களிலும், சுகாதார குறைபாட்டிற்கு 96 00212 764 என்ற எண்களிலும் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தினமான இன்று அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது .எனவே திருச்சி மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்றுள்ள மது கூடங்கள், வாணிபக் கழகத்தின் விற்பனை மது கடைகள் கட்டாயம் மூடப்பட வேண்டும் .இதனை மீறி விற்பனை செய்தால் ,கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள அரசு மதுபான கடை, பஸ் ஸ்டாண்ட் வணிக நிறுவனங்கள் கோவில் பள்ளியில் என மக்கள் நெரிசல் மிகுந்த பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை மே 5ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்யப்படவில்லை என்றால் 18ஆம் தேதி வியாபாரிகள் சங்கம் சார்பில் கடைகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என வியாபாரிகள் சங்கம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் பகுதியில் உள்ள,இ. எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எட்டாம் ஆண்டு விழா நேற்று (ஏப்ரல் 30) முதல்வர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் வேல்முருகன் வரவேற்றினார், சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி பல்கலைக்கழகம் சுப்பிரமணிய பாரதி தமிழ் மொழி மற்றும் இலக்கிய பள்ளித் துறை தலைவர் கருணாநிதி கலந்து கொண்டார்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு, அனுபவம் உடைய ஓட்டுநர்கள் மட்டுமே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுவர். மேலும் ஏற்காடு அடிவார சோதனைச் சாவடியிலேயே காவல்துறையினர் மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் மூலம் ஆய்வு செய்த பின்னர் மட்டுமே வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.