Tamilnadu

News May 3, 2024

தி.மலை: சற்றே குறைந்த வெப்பநிலை 

image

தி.மலை மாவட்டம், செங்கம் இன்று அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி (105. 8 டிகிரி ஃபாரன்ஹீட்) செல்சியஸ் பதிவானது. நேற்றைய தினத்தைவிட ஒரு டிகிரி செல்சியஸ் குறைவாகவே இருப்பினும் வெப்பம் கடுமையாகவே இருந்தது. சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் வாகனங்களின் போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது. நாளை அக்னி நட்சத்திரம் தொடங்க இருப்பதால் 2-4 டிகிரி உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

News May 3, 2024

திருவள்ளூர் தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு!

image

திருவெற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் உடனுறை தியாகரஜசுவாமி கோவில், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடப்பெற்ற தலமாகும். 7 அடுக்கு நுழைவாயில் கோபுரத்துடன் 1 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 51 சக்தி பீடங்களில் ஒன்றானது இத்தலம் தொண்டைமண்டலத்தின் முக்கோண கோயிலில் ஒன்று. இங்கு கிடைத்த பல்லவர் கால கல்வெட்டுகள் இக்கோயிலின் வரலாற்றை பறைசாற்றுகின்றன.

News May 3, 2024

பகவதி அம்மன் கோயிலில் கால் கோள் விழா

image

குமரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழாவிற்கான கால்கோள் நடும் விழா இன்று காலை பகவதி அம்மன் கோயிலில் நடைப்பெற்றது. இதில் குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

News May 3, 2024

சேலம் சங்ககிரி கோட்டை வரலாறு!

image

சேலத்தில் சங்ககிரி சதுக்கம் என்ற மலை மேல் அமைந்துள்ளது சங்ககிரி கோட்டை. சங்கு வடிவ இக்கோட்டை விஜயநகர பேரரசரால் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். கொங்குநாட்டிற்கான வரி வசூல் கிடங்காக ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டது. மன்னர் திப்பு சுல்தானின் முக்கியமான படைத்தளமாகவும், பின்னர் ஆங்கிலேயர்களின் படைத்தளமாகவும் இருந்துள்ளது. சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை இங்கு தான் தூக்கிலிடப்பட்டார்.

News May 3, 2024

சேலம் மக்கள் கவனத்திற்கு..!

image

சேலம் மாவட்டத்தில் வெப்ப அலை பாதிப்பு இன்றும்(மே 3) அதிகரிக்க கூடும் என்பதால், பொதுமக்கள் வெப்ப அலையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். தர்பூசணி, முலாம்பழம், நுங்கு, வெள்ளரிப்பழம் உள்ளிட்ட பழங்களையும், நீர் சத்து காய்கறிகளையும் அடிக்கடி உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்திகின்றனர்.

News May 3, 2024

காங்கிரஸ் கட்சி சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

image

இன்று கரூர் தாந்தோன்றிமலை முருகன் கோவிலில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் கோடையை வெயிலிலிருந்து பொதுமக்களை தற்காத்துக் கொள்வதற்காக நீர் மோர் பந்தலை பேங்க் சுப்பிரமணி தலைமையில் திறந்து வைத்து வெள்ளரிக்காய், இளநீர், மோர் ஆகியவை வழங்கினார். உடன் மாவட்ட துணை தலைவர் சின்னையன், மாவட்ட செயலாளர் திருக்காம்புலியூர் சேகர், வட்டார தலைவர் ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News May 3, 2024

நாக முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

image

மயிலாடுதுறை, குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாம்புள்ளி கிராமத்தில் நாக முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா இன்று நடைபெற்றது. கங்கணம் கட்டிக்கொண்டு விரதமிருந்த பக்தர்கள் வீரசோழன் ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் முன் செல்ல காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்பாளுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

News May 3, 2024

மதுரை கூடலழகர் கோவில் சிறப்பு!

image

மதுரையில் அமைந்துள்ள கூடலழகர் கோவில் 108 திவ்ய வைணவ தேசங்களில் ஒன்றாகும். சிலப்பதிகாரம், பரிபாடலிலும் மூலவரை குறிப்பிட்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஐந்து கலசத்துடன் கூடிய ஐந்து நிலை ராஜகோபுரம், அஷ்டாங்க விமானம், எட்டுப் பிரகாரங்களுடன், இக்கோயில் உள்ளது. சைவம் வைணவமும் ஒரே மதம் தான் என்பதை காண்பிக்கும் வகையில் புராணக்கதை படி அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் நடைபெறுவது உலகப்புகழ் பெற்றதாகும்.

News May 3, 2024

விழுப்புரம்: எம்பி ரவிக்குமார் ஆட்சியர் சந்திப்பு

image

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் 6 சிசிடிவி கேமராக்கள் அரை மணி நேரம் இயங்காததை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமார் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து விளக்கம் கோரினார். ஆட்சியர் மின்னழுத்தம் தான் காரணம் என்று விளக்கம் அளித்ததாக ரவிக்குமார் தெரிவித்தார்.

News May 3, 2024

ஆசிரியர் குடும்பத்திற்கு உதவிய ஒய்வு IAS அதிகாரி

image

ஓய்வுபெற்ற IAS அதிகாரி பாலசந்திரன் 60 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கலில் 7, 8 வகுப்பு படித்தபோது ராமசாமி என்ற தமிழ் ஆசிரியர் பாடம் எடுத்துள்ளார். ஆசிரியர் 7 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அவரது குடும்பம் வறுமையில் இருப்பதை அறிந்த பாலச்சந்திரன், நேமம் கிராமத்தில் உள்ள ஆசிரியர் மனைவிக்கு மருத்துவ வசதி ஏற்படுத்தியும், பேரனுக்கு மாடு வாங்க ரூ.45,000பணம் கொடுத்து உதவியுள்ளார்.

error: Content is protected !!