Tamilnadu

News April 28, 2024

நாமக்கல் பழக்கடைகளில் திடீர் சோதனை

image

நாமக்கல் மாவட்டத்தில், பல இடங்களில் ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் வைக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அருணன் உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ப.வேலூரில் நடைபெறும், இன்று ஞாயிற்றுக்கிழமை வார சந்தையில், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி ரசாயன பழங்களை அழித்தனர்.

News April 28, 2024

கடலூரில் நீச்சல் வகுப்பு துவக்கம்

image

கடலூர், அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால 2ஆம் கட்ட நீச்சல் வகுப்புகள் கடந்த 16ஆம் தேதி துவங்கி இன்று நிறைவடைந்தது. இந்நிலையில் 3-ஆம் கட்ட நீச்சல் வகுப்பு வரும் 30ஆம் தேதி முதல் மே மாதம் 12ஆம் தேதிவரை நடைபெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் செ. மகேஷ்குமார் தெரிவித்துள்ளாா்.

News April 28, 2024

வனப்பகுதியில் வனத்துறையினர் எச்சரிக்கை

image

சேலம் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தீ தடுப்பு குறித்து வனத்துறையினர் கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வனத்துக்குள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வனப்பகுதியில் தீ வைப்போருக்கு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 3 மாதம் முதல் 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

News April 28, 2024

திருச்சியில் காரைக்குடி வாலிபர் சடலம் 

image

காரைக்குடியைச் சேர்ந்தவர் பிரசாந்த். வீட்டை விட்டு வெளியேறி திருச்சிக்கு வந்தார். இந்நிலையில், திருச்சியில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த இவர் நேற்று வரகனேரி ஓடத் தெரு பகுதியில் உள்ள சாக்கடையில் சடலமாக  கிடந்தார்.இச்சம்பவம் குறித்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அவர் எப்படி இறந்தார்?என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 28, 2024

கடலூர்: விபத்தில் 3 பேர் படுகாயம்

image

பண்ருட்டி தாலுகா வானமாதேவியை சேர்ந்தவர் சச்சிதானந்தம் (27). இவர் தனது நண்பர்கள் சரண்ராஜ், அருண்குமார் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் இன்று வான்பாக்கம் சாலையில் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது . இதில் பலத்த காயமடைந்த சச்சிதானந்தம் உள்ளிட்ட 3 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 28, 2024

வேலூரில் இன்று 106.0°F வெயில் பதிவானது

image

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 பாரன்ஹீட் வெயில் பதிவாகி வந்த நிலையில், இன்று (ஏப்ரல் 28)  அதிகபட்சமாக 106.0°F வெயில் பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெளியே செல்லும் பொதுமக்கள் தண்ணீர் மற்றும் முன்னெச்சரிக்கையாக செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

News April 28, 2024

தாக்குப்பிடிக்குமா சென்னை!

image

கோடை வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஆங்காங்கே தண்ணீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டு வருகிறது. இதில் சென்னை தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகமாக கையாளும் இடமாகும். தற்போது வீராணம் ஏரி வறண்ட நிலையிலும், புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் 6.88 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது. மொத்தத்தில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமான எரிகளில் நீர் இருப்பு 11.75டிஎம்சி ஆக உள்ளது. இந்த கோடையை சென்னை தாக்குபிடிக்குமா?

News April 28, 2024

வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலை நொச்சிதோட்டம் பகுதியை சேர்ந்த தங்கமுத்து என்பவருக்கு இன்று மதியம் வைக்கோல் கட்டுகள் ஏற்றி கொண்டு லாரி வந்துள்ளது. லாரி தோட்டத்திற்குள் சென்ற போது மின்கம்பியில் உரசி தீ பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் லாரியில் பற்றிய தீயை அணைத்தனர்.

News April 28, 2024

தி.மலை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு தினமும் மின்சார ரயில் இயக்கப்படுகிறது. பாஸ்ட் மின்சார ரயில் சேவையானது  மாலை 6 மணிக்கு கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்பட்டு வேலூர் கண்டோன் மென்ட்டிற்கு இரவு 9.35 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயில் மே மாதம் 2-ந்தேதியில் இருந்து வேலூரில் இருந்து திருவண்ணாமலை வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் பச்சைக் கொடி காட்டியுள்ளது.

News April 28, 2024

இளைஞர் கொலை வழக்கில் நான்கு பேர் கைது

image

கிருஷ்ணகிரி மாவட்டம் தின்னகழனி கிராமம் அருகே நேற்று இரவு மதுபோதையில் வந்த மர்ம கும்பல் கார்த்திக் என்ற இளைஞர் மீது பைக்கை ஏற்றியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில், கொலை நடந்த 12 மணி நேரத்தில் போலீசார் குற்றவாளிகளான கார்த்திக், அருண், சிவா மற்றும் கணேஷ் ஆகிய 4 பேரை இன்று கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!