India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மத்திய அரசு சார்பில் பிரதம மந்திரியின் இலவச லேப்டாப் திட்டம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உள்ளது. விரைவாக பதிந்து கொண்டு இதனை 15 பேருக்கு அனுப்பினால் உங்கள் விண்ணப்பம் பூர்த்தியாகும் என வாட்ஸ் அப்பில் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அந்த மாதிரியான திட்டம் எதுவும் இல்லை இது போலி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலையில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது. பழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் பாலப்பம்பட்டியில் இருந்து நான்கு வழிச்சாலை வழியாக செல்ல வேண்டும். இதே போல திருப்பூர் செஞ்சேரிமலை வழித்தடத்தில் வரும் வாகனங்கள் எரிப்பாளையம் சர்வீஸ் ரோடு வழியாக பஸ் ஸ்டாண்ட் வந்து பழனி தேசிய நெடுஞ்சாலை இணையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி கொள்ளிடம் பகுதியில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை செய்து, அதில் பல ஆவணங்களை எடுத்துச் சென்றனர். மேலும் மணல் எவ்வளவு ஆழம் அள்ளப்பட்டுள்ளது, எனவும் சோதனை நடத்தினர். இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன்படி இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் சென்னையில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜராகிறார்கள் .

சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று(24.4.2024) இரவு லஞ்ச ஒழிப்புத்துறை சுமார் 3 மணி நேரமாக ஆய்வு செய்தனர். அதில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி தேவநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பணத்தை கைப்பற்றினர் தணிக்கை குழுவிற்கு லஞ்சம் கொடுப்பதற்காக வைத்திருந்த பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி கைப்பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு

திருவாரூர் திருத்துறைப்பூண்டி ரயில் வழித்தடத்தில் ஐந்து புதிய ரயில் சேவை வரும் 03.05.24 முதல் துவங்கவுள்ளது. அதன்படி திருவாரூர்-திருச்சிராப்பள்ளி, திருவாரூர்-அகஸ்தியம்பள்ளி, திருவாரூர்-காரைக்குடி, திருவாரூர்-விழுப்புரம், திருவாரூர்-பட்டுக்கோட்டை ஆகிய ஐந்து ரயில்கள் தினசரி இயக்கப்படவுள்ளதாக ரயில்வே வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூரை சேர்ந்தவர் ஹேமநாத். இவர் இன்று தனது இருசக்கர வாகனத்தில் கட்டேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த படுகாயமடைந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஏப்.25) வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்.25) வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் சேலம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, சேலம் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.25) வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் பெரம்பலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராணிபேட்டை மாவட்டத்தில் இன்று (ஏப்.25) வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் ராணிபேட்டை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, ராணிபேட்டை மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.