Tamilnadu

News March 30, 2024

வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் வெளியீடு

image

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக புதுச்சேரியில் 27 பேரின் வெட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப்பெற இன்று(30.3.24) கடைசி நாளாகும், மாலை 5 மணி வரை தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம். இந்நிலையில் புதுச்சேரியில் எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள்? என்ற இறுதி விவரம் தெரியவரும்.  

News March 30, 2024

பதற்றமான வாக்கு சாவடி குறித்து ஆய்வு 

image

மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட அடியக்கமங்கலம், திருவாரூர் நகரில் உள்ள காரைக்காட்டுத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை (29.03.2024) மாலை தேர்தல் பார்வையாளர் சரணப்பா நேரில் பார்வையிட்டார். அப்போது, திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனிருந்தார்.

News March 30, 2024

திமுக வேட்பாளர் சொத்து விவரம்……

image

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகன் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் அசையும், அசையா சொத்துகள் மொத்தமாக ரூ.53.45 கோடியிலும், தனக்கு ரூ.649 கோடி கடன் இருப்பதாகவும், தனக்கு காா் இல்லை என்றும் தனது தேர்தல் வேட்பு மனு தாக்கல் உறுதிமொழி பத்திரத்தில் தெரிவித்துள்ளாா்.

News March 30, 2024

ஈரோடு: ஏப்ரல் 7 மறக்காதீங்க

image

கங்காபுரம் டெக்ஸ்வேலி ஏப்ரல் 7ஆம் ஆம் தேதி ஒரு வயது முதல் 8 வயது உள்ள குழந்தைகளுக்கு சம்மர் ஜாய் கேம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் ஆடை அலங்கார அணிவகுப்பு, ஓவியம், நடனம், பேச்சு ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன. முகாமில் கலந்து கொள்ளும் அனைத்து குழந்தைகளுக்கும் தொப்பி பலூன் சிற்றுண்டி ஆகியவை இலவசமாக வழங்கப்பட உள்ளது.

News March 30, 2024

தேனி அருகே விபத்து: ஒருவர் பலி

image

அணைக்கரை பட்டியைச் சேர்ந்தவர் சின்னசாமி ராஜா. இவர் தோட்டத்திற்கு செல்வதற்காக தனது டூவீலரில் தேனி போடி மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். பங்காரு சாமிகுளம் தரைப்பாலம் அருகே வந்தபோது பின்னால் வேகமாக வந்த ஜீப் இவரின் டூவீலர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த சின்னசாமி ராஜாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 30, 2024

தூத்துக்குடி: திருடிய வீட்டில் திருடன் செய்த காரியம்

image

சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூர் கிராமத்தை சேர்ந்த நீல புஷ்பம் (60) என்ற மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த திருடன் அங்கே குளித்து இளைப்பாறி வீட்டிலிருந்த ரூ.2 லட்சம் மற்றும் நகைகளை மர்ம நபர் திருடி சென்று உள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய தனிப்படை எஸ்ஐ டேவிட் தலைமையிலான போலீசார் திருட்டில் ஈடுபட்ட ஜெயக்குமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 30, 2024

விஷப்பூச்சி கடித்து பள்ளி மாணவா் பலி

image

தேனி பகுதியைச் சேர்ந்தவர் சிவனேஷ். இவர் தனது குடும்பத்துடன் சிவகங்கையில் உள்ள காளி கோயில் வழிபாட்டுக்காக திருப்புவனத்தில் உறவினா் வீட்டுக்கு வந்து தங்கினாா். இந்நிலையில் நேற்று சிவனேஷ் மகன் மாதேஷை (14) விஷப்பூச்சி கடித்ததால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மாதேஷை பரிசோதித்த மருத்துவா்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 30, 2024

விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

image

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு கொண்டம்பட்டி பகுதியில் தனியார் மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இதில் மகாராஷ்டிராவை சேர்ந்த ஜெய்ஷித்தல் முண்டே, ரிஷிகேஷ் ரமேஸ்வரர் குட்டே படித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் டீ குடிப்பதற்காக வெளியே சென்று விட்டு பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் பைக்கில் வந்து கொண்டு இருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 பேர் சம்பவயிடத்திலே உயிரிழந்தனர்.

News March 30, 2024

சாராயம் கடத்தியவர் கைது

image

நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேக்ரவிராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அந்த மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர். அவர் திருப்புகலூர் சேர்ந்த வீராச்சாமி என்பதும் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தியது தெரியவந்தது. அவரை கைது செய்து, 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. 

News March 30, 2024

திருவள்ளூர்: துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு

image

திருவள்ளூர் நகராட்சியில் மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 100% வாக்களிப்பதன் அவசியம், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் செய்ய வேண்டிய ஜனநாயக குறித்து நேற்று (மார்ச் 29) பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரபுசங்கர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் இந்த நிகழ்வில் துறைசார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.

error: Content is protected !!