India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆறுமுகநேரியை சேர்ந்த கண்ணன் நேற்று முன்தினம் காயல்பட்டினம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே காந்திநகர் கிராமத்தில் இருந்து சென்ற நகரப் பேருந்து நேற்று மாலை எதிரே இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிவா என்பவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதியை சேர்ந்தவர் இம்ரான் ஜாவித் (28). இவர் நேற்று (மார்ச்.29) வாணியம்பாடி கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பெங்களூரில் இருந்து தானபூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் காட்பாடி, காங்கேயநல்லூரில் சமேத காங்கீஸ்வரர் திருக்கோவிலில் மாவடி சேவை திருவிழா நேற்று மாலை நடைபெற்றது.பின்னர் இரவு சிறப்பு மேள வாத்தியத்துடன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சூளகிரி அடுத்துள்ள கொட்டாவூரை சேர்ந்தவர் சின்னராஜ் (59) விவசாயியான இவர் கடந்த 27ஆம் தேதி அன்று டூவீலரில் அங்கொண்டப்பள்ளியில் சென்றபோது அந்த வழியாக மற்றொரு டூவீலர் சின்னராஜ் ஓட்டி சென்ற டூவீலரில் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சின்னராஜ் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலை பணிக்காக, ஜானகிபுரம்-கண்டமானடி குறுக்கே அமைந்துள்ள ரயில்வே கேட் (மார்ச் 22) மூடப்பட்டது. இதனால் விழுப்புரத்திற்கு செல்லும் மக்கள் 5 கிமீ தொலைவிற்கு சுற்றிச் செல்கின்றனர். எனவே ரயில்வே கேட்டை உடனடியாக திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று (மார்ச் 29) வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அறிவித்துள்ளனர்.

பண்ணாரி அம்மன் பண்டிகை முன்னிட்டு மார்ச்.28 இல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதை ஈடு செய்யும் விதமாக இன்று ம்(மார்ச்.30) அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் எனவும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கார ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி இன்று அனைத்து பள்ளிகளும் வழங்கும் போது இயங்கும்.

சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வ கணபதி ஆதரித்து இன்று சேலம் உழவர் சந்தை மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களிடம் தமிழக முதல்வர் திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் நாடாளுமன்ற வேட்பாளர் டி எம் செல்வ கணபதி ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார் அருகில் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் தோழமைக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் பங்குனி மாத வெள்ளிக்கிழமை ஒட்டி இன்று கோவிலில் சிறப்பு தங்க தேர் பவனி நடைபெற்றது. இதில் காமாட்சி அம்மன் லட்சுமி சரஸ்வதி உடன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் மதச் சார்பற்ற இந்திய கூட்டணி சார்பில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகனை ஆதரித்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி நேற்று இரவு உதயசூரியன் சின்னத்தில் பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் உடன் இருந்தார்
Sorry, no posts matched your criteria.