India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

INDI கூட்டணியின் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேற்று (மார்ச் 29) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில இணைத்தலைவர் மகேந்திரன், திருநெல்வேலி மாநகர மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் காமராஜ் பங்கேற்றனர்.

இலுப்பையூர் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னம்மாள். டேங்க் ஆப்ரேட்டரான இவர் நேற்று காலை அங்குள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியின் மின் மோட்டாரை இயக்க சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர் பொன்னம்மாள் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பினார். இது குறித்து புகாரின் பேரில் செந்துறை காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் நகராட்சியில் மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து நேற்று (மார்ச் 29) பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரபுசங்கர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் இந்த நிகழ்வில் துறைசார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் எடுத்துக்கட்டி ஊராட்சியில் திமுகவை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி நேற்று அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் இல்லத்தில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் அவர்களுக்கு அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். இதனையொட்டி கோவில்பட்டியில் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நகர திமுக அலுவலகத்தில் வைத்து நகர சபை தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

தி.மலை மாவட்டம் போளூர் நகரத்தில் ஆரணி மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளர் தரணிவேந்தன் திமுக மாநில மருத்துவரணி துணை தலைவரும், போளூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான மரு. எ.வ.வே.கம்பன், வணிகர் சங்கத்தினரை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு,அதிமுக கூட்டணியில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் சிவக்கொழுந்துவிற்கு ஆதரவாக இன்று மாலை 6 மணிக்கு கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

ஏலகிரி மலை பஞ்சாயத்து அலுவலகத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெயர் சேர்த்தல், கைபேசி எண் இணைத்தல், முகவரி மாற்றுதல், புதியதாக சாதி சான்றிதழ் பெறுவதற்கு இன்று, மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் முகாம் நடைபெறும் என ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் உதகை சுதந்திர நினைவு திடல் முன்பு இன்று (மார்ச் 30) மதியம் 12.30 மணியளவில் வருமான வரித்துறையின் செயலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.கணேஷ் அறிக்கையில் கூறியுள்ளார்.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் நிகழாண்டுக்கான திருவிழா ஏப்.12 முதல் 23 வரை நடைபெறுகிறது. ஏப்.12 கொடியேற்றத்துக்குப் பின், ஒவ்வொரு நாள் மாலையும் சுவாமி அம்பாளுடன் சிம்மம்கமலம்,அன்னம்,யாழி, காமதேனு, பொன்மான் வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது. சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஏப்.21, அடுத்த நாள் தேரோட்டமும் நடைபெறுகிறது. ஏப்.23 தீா்த்தவாரியுடன் நிறைவடைகிறது.
Sorry, no posts matched your criteria.