India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக இருந்தவர் அருள் ஆண்டனி. பேராசிரியாக இருந்தவர் ரவி. இருவரும் மாணவர்களிடம் துறை மாற்றம் செய்ய லஞ்சம் பெற்றதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று(மார்ச்.29) வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து உதகை லஞ்ச ஒழிப்புத் துறை டி எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் ஆகியோரை ஆதரித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வருகிற 3 மற்றும் 4 ஆம் தேதி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

திருப்பத்தூர் பகுதிகளில் கள்ள சாராயம் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் கள்ள சாராயம் விற்பனையில் ஈடுபட்ட கணேஷ், மேற்கத்தியனூர் துளசி, திருப்பத்தூர் டிஎம்சி நகர் பகுதியைச் சேர்ந்த பசுபதி ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்து வரும் நிலையில் பக்தர்கள் அதிகப்படியாக வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் மக்களவை தேர்தல் விதிகள் நடைமுறையில் உள்ளதால் கோயிலில் வழங்கப்படும் சிறப்பு முன்னுரிமை டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்று திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பழனி மலை அடிவாரத்தில் சுற்றுலா பேருந்து நிலையம் அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பை கிடங்கில் இன்று தீ பற்றியது. சற்று நேரத்தில் தீ முழுவதுமாக பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். குப்பைகளுக்கு தீ வைத்த மர்மநபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவர் பிரிவு செயலாளராக, மதுரையைச் சேர்ந்த இளைஞர் எம். ராஜீவ் காந்தி நியமிக்கப்பட்டார். சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் ஒப்புதலோடு காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். அதேபோல் (மார்ச் 29) இன்று நடந்த சந்தையில், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த அளவிலான ஆடுகளே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் இன்று மட்டும் 8 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று (மார்ச்.29) அவருடைய எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேர்தல் நடத்தை விதி (MCC) மீறல்கள் தொடர்பான புகார்களை, பொதுமக்கள் “civil investigator” செயலி (App) மூலம் அல்லது தேர்தல் கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா 18004251215 என்ற தொலைபேசி எண் மூலம் பதிவு செய்யலாம். புகார்கள் உடனடியாக பறக்கும் படை குழுக்கள் மூலம் விசாரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

கவர்னர் ஆர். என்.ரவி 30-ந்தேதி ஊட்டி வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கவர்னர் 4-ந் தேதி காலை 11 மணி அளவில் கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். கவர்னர் அரசியல் ரீதியான கருத்துகளை அவ்வப்போது கூறி சர்ச்சை ஏற்படுவதால், கவர்னர் பயணத்தையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வெலிங்டன் என்பவர் இன்றுமது அருந்திய நிலையில், தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது, திண்டுக்கல்லை அடுத்த நல்லமனார் கோட்டை அருகே ரயில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். தகவலறிந்து வந்த இரும்புப் பாதை போலீசார் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக வெலிங்கடனிடம் விசாரணை நடத்தினர்.
Sorry, no posts matched your criteria.