India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் காட்பாடி, காங்கேயநல்லூரில் சமேத காங்கீஸ்வரர் திருக்கோவிலில் மாவடி சேவை திருவிழா நேற்று மாலை நடைபெற்றது.பின்னர் இரவு சிறப்பு மேள வாத்தியத்துடன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சூளகிரி அடுத்துள்ள கொட்டாவூரை சேர்ந்தவர் சின்னராஜ் (59) விவசாயியான இவர் கடந்த 27ஆம் தேதி அன்று டூவீலரில் அங்கொண்டப்பள்ளியில் சென்றபோது அந்த வழியாக மற்றொரு டூவீலர் சின்னராஜ் ஓட்டி சென்ற டூவீலரில் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சின்னராஜ் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலை பணிக்காக, ஜானகிபுரம்-கண்டமானடி குறுக்கே அமைந்துள்ள ரயில்வே கேட் (மார்ச் 22) மூடப்பட்டது. இதனால் விழுப்புரத்திற்கு செல்லும் மக்கள் 5 கிமீ தொலைவிற்கு சுற்றிச் செல்கின்றனர். எனவே ரயில்வே கேட்டை உடனடியாக திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று (மார்ச் 29) வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அறிவித்துள்ளனர்.

பண்ணாரி அம்மன் பண்டிகை முன்னிட்டு மார்ச்.28 இல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதை ஈடு செய்யும் விதமாக இன்று ம்(மார்ச்.30) அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் எனவும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கார ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி இன்று அனைத்து பள்ளிகளும் வழங்கும் போது இயங்கும்.

சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வ கணபதி ஆதரித்து இன்று சேலம் உழவர் சந்தை மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களிடம் தமிழக முதல்வர் திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் நாடாளுமன்ற வேட்பாளர் டி எம் செல்வ கணபதி ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார் அருகில் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் தோழமைக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் பங்குனி மாத வெள்ளிக்கிழமை ஒட்டி இன்று கோவிலில் சிறப்பு தங்க தேர் பவனி நடைபெற்றது. இதில் காமாட்சி அம்மன் லட்சுமி சரஸ்வதி உடன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் மதச் சார்பற்ற இந்திய கூட்டணி சார்பில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகனை ஆதரித்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி நேற்று இரவு உதயசூரியன் சின்னத்தில் பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் உடன் இருந்தார்

துறைமங்கலம் 3ரோடு பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள், தேர்தல் நிதியளிப்பு மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் நடராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். கட்சி நிர்வாக்கள்தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் ரமேஷ் தகவல் வெளியிட்டுள்ளார்.

திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் இந்தியாவின் முதல் தானியங்கி தொழில்நுட்ப தொழில்துறை ஆய்வகம் நேற்று தொடங்கப்பட்டது. இந்திரா கணேசன் கல்வி குழும தலைவர் கணேசன் தலைமையிலும் செயலாளர் ராஜசேகரன் மற்றும் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர், சென்னை பல்கலை கழக துணை வேந்தர் ராஜ் திறந்து வைத்தார். தானியங்கி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்கள் திறன் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜாண்தங்கம் அவர்களை தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் பிரதீஜீன் நேற்று சந்தித்து குமரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவிற்கு தங்கள் ஆதரவினை தெரிவித்தார். மேலும் வேட்பாளர்கள் வெற்றி பெற முழுமூச்சாக செயல்படுவதாகவும் தெரிவித்தார். விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளர் ராணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.