India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாபுவிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி மகாராஜபுரம் பகுதியில் வீடுகளில் உள்ள சுவர்களில் விளம்பரம் இன்று செய்யப்பட்டது. தொடர்ந்து நிர்வாகிகள் இரட்டை இலை சின்னம் மற்றும் வேட்பாளரின் பெயரை சுவரில் வரைந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இன்று
காரிமங்கலம் அருகே காட்டுசீகல அள்ளி தேசிய நெடுஞ்சாலையில் கெரகோட அள்ளியை சேர்ந்த ஞானசேகர் (43) நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது டாடா ஏஸ் வாகனம் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தி.நகர் மேட்லி, இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (57). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 29-ம் தேதி வேளச்சேரியில் உள்ள இடத்தை விற்பது தொடர்பாக ஒருவரைச் சந்திக்க வேளச்சேரி காந்தி ரோடு செல்வா நகருக்குச் சென்றார். அப்போது மூன்று பைக்கில் வந்த மர்ம கும்பல், பழனிச்சாமியை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தது.

தி.மலை மத்திய பேருந்து நிலையத்தில் 2024 மக்களவை தேர்தலையொட்டி இந்தியன் வங்கி சார்பில் 100 % வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய ராட்சச பலூனை பறக்கவிட்டு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று (30.03.2024) விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது மாவட்ட தேர்தல் அலுவலர் உடன் இருந்தார்.

கரூரில் அதிமுக வேட்பாளரை அழைத்து வராமல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரச்சாரம் செய்தார். அவர் சென்ற சில நிமிடங்களில் தாம்பூல தட்டுடன் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பெண்களுக்கு, தலா 50 ரூபாயை அதிமுகவினர் வழங்கினர். நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில் 50 ரூபாய் மட்டும் கொடுப்பதாக அதிமுகவினரிடம் பெண்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் சங்கிலிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம். தனது குடும்பத்துடன் திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டு இன்று ரயில் மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் திருப்பத்தூர் நோக்கி சென்றபோது ஷேர் ஆட்டோ நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்ததில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் படுகாயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பாக நாடாளுமன்ற தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது இந்நிலையில் சிவகாசி ஊராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் உள்ள மேல்நிலைக் குடிநீர் தொட்டிகளில் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற வாசகத்தை அனைவரும் அறியும் வகையில் சுவர் விளம்பரம் வரைந்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய, 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.ராசிபுரத்தில், 2,105 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், 1,982 பேர், என, மொத்தம், 4,087 பேர் உள்ளனர். அதில், 977 பேருக்கு, வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் ஓட்டு போடும் வகையில், ’12டி’ படிவம் வழங்கப்பட்டுள்ளது என தேர்தல் அலுவலர் உமா தெரிவித்துள்ளார்.

சினிமா பிரபலமும், அதிமுக பிரமுகருமான நடிகை விந்தியா திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணியை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார். ஏப்ரல் 2ம் தேதி திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அதிமுக தேர்தல் பணிக்குழு தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வரும் ஏப்ரல் மாதம் நவீன லேப்ராஸ்கோபி மூலம் குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 15 ஆம் தேதி காடையாம்பட்டி, இளம்பிள்ளையில் 23ஆம் தேதி, கருமந்துறையில் 24ஆம் தேதி, மகுடஞ்சாவடியில் 25ஆம் தேதி, நங்கவள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30ஆம் தேதி குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.