India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகரில் நாளை வாக்காளர் விழிப்புணர்வு குறித்த மாரத்தான் போட்டி மருத்துவக் கல்லூரியில் துவங்கி நடைபெற உள்ளது. கல்லூரி மாணவ மாணவியருக்கு தனித்தனியாக நடைபெற உள்ள இந்த மாரத்தான் காலை 6.30 மணியளவில் துவங்க உள்ளது. இதில் மாணவர்களுக்கு 10 கி.மீ தூரமும் மாணவியருக்கு 8 கி.மீ தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத்தொகையும் வழங்க உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான பணி நெல்லையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருநெல்வேலி மக்களவை தொகுதியில் மொத்தம் 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.15 வேட்பாளர்களுக்கு மேல் களத்தில் உள்ளதால் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்.

புதுகை மக்களவையின் கீழ் வரும் அறந்தாங்கி பகுதியில் இன்று ஓபிஎஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்ணுக்கு ஓபிஎஸ் பணம் கொடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் கண்காணிப்பு அலுவலர் அருண் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதேபோல், மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்த நேரத்திற்கு முன்பாக கூட்டம் நடத்தியதாகவும் புகார் அளிக்கப்பட்டது.

சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி, சாணார்பட்டி, கட்டக்குளம், உள்ளிட்ட பகுதிகளில் இன்று தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் விரலை துண்டாக வெட்டினாலும் இரட்டை இலையை தவிர வேறு சின்னத்திற்கு வாக்களிக்க மாட்டார்கள் இந்த தொகுதி மக்கள் என நம்பிக்கை தெரிவித்து பேசினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ளது புன்னகரம் கிராமம். இந்த ஊர் வழியாக டிப்பர் லாரிகளில் கற்களை ஏற்றி செல்கின்றனர். இந்நிலையில், இன்று கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி ஒன்று நிலைத்தடுமாறி ஸ்ரீ ராமப்பா என்பவரின் வீட்டின் மீது மோதியதில் வீடு தரை மட்டமாகியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து பேரிகை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த இடங்களில் தேர்தல் தொடர்பான செலவின புகார்களை அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தேர்தல் பார்வையாளர் வருண்சோனியின் கைபேசி எண்ணில் 9363981394 தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறை வளாகத்தில் கிடந்த பார்சலில் இருந்து 5 செல்போன்கள், குட்கா, பீடி உள்ளிட்டவற்றை காவலர்கள் நேற்று கைப்பற்றினர். காலாப்பட்டு மத்திய சிறைக்கு பார்சல் வீசியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புதுச்சேரி மத்திய சிறைக்கு வீசப்பட்ட 5 செல்போன்கள், வைஃபை மோடம், பீடி, குட்கா பார்சலை பறிமுதல் செய்தனர்.

அரக்கோணம் அடுத்த தண்டலத்தைச் சேர்ந்தவர் சுமதி 45 இவர் கட்டிட தொழிலாளி. இன்று மதியம் சித்தேரி பஸ் ஸ்டாப் அருகில் ஓரமாக நடந்து சென்றார் அப்போது சோளிங்கரில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த லாரி சுமதி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது .அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது சகோதரியான பிரியா குடும்பத்துடன் அருகில் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று செல்வம் வளர்க்கும் நாய் பிரியாவின் வீட்டிற்குள் சென்றதால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்நிலையில், இது குறித்து இரு குடும்பத்தைச் சேர்ந்த 11பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி அருகே உள்ள அரியாம்பாளையம் பகுதியில் +1 படிக்கும் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது . தேர்வு நடைபெறும் நிலையில், படிப்பில் மகள் கவன குறைவாக இருப்பதாக கூறி தாய் கண்டித்ததால் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Sorry, no posts matched your criteria.