India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் ஓபிஎஸ் மீது அறந்தாங்கி காவல்நிலையத்தில் 3 பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெண்கள் ஆரத்தி எடுத்துபோது ஓபிஎஸ் பணம் வழங்கியதாக புகார் எழுந்தது. மேலும், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே கூட்டம் நடத்தியது உள்ளிட்ட காரணங்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் அப்பகுதியை சேர்ந்த சிலர் பழைய தீயணைப்பு நிலையம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலில் பேரில் வாசுதேவநல்லூர் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைத்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 6 பெண்கள் உட்பட 10 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுராந்தகம் தாலுகா பவுஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் தாவூத்(42). இவர் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த
மேவளூர்குப்பம் பகுதியில் வசித்துக் கொண்டு வெல்கம் டிரான்ஸ்போர்ட் நடத்தி வந்தார்.இந்நிலையில் இன்று காலை சுமார் 6 மணியளவில் தாவூத் மனைவியான நூர்ஜஹானுக்கு வீடியோ கால் மூலம் போன் செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும், தாங்கள் வேட்பு மனுதாக்கல் செய்த நாளிலிருந்து, வாக்குப்பதிவு நாள் வரையிலான தேர்தல் செலவின கணக்குகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியீட்டுள்ள உள்ள அறிவுரைகளின்படி, குறைந்தபட்சம் மூன்று முறை தேர்தல் செலவின பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட தமிழக மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் போக்குவரத்தை நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பேருந்துகள், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் அனுப்பி வைக்கப்பட்டு ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு தேதியில் மாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல்.10 அன்று நடைபெற இருந்த அறிவியல் தேர்வு 22.4.2024 அன்றும், 12.4.2024 அன்று நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு 23.4.2024 அன்றும் நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. இதனால் கோடை விடுமுறை தள்ளிப்போவதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 4 முதல் 9ம் வகுப்பு மாணவா்களுக்கு ஏப்.10ம் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வு ஏப்.22ம் தேதிக்கும், அதேபோல், ஏப்ரல் 12-இல் நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 23ம் தேதிக்கு மாற்றப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார். ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழக பள்ளி கல்வித்துறையின் உத்தரவின் கீழ் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை விமான நிலைய அலுவலர்கள் குடியிருப்பு வளாகத்திற்குள் 9க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அடித்து கொல்லப்பட்டு, தெருக்களில் வீசப்பட்டுள்ளதாக விலங்கியல் ஆர்வலர்கள், புகைப்பட ஆதாரங்களுடன் பீட்டா அமைப்புக்கு புகார் தெரிவித்தனர். இது பற்றி நேற்று மீனம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும், புகார் அளித்துள்ள பீட்டா அமைப்பிடமும் விசாரணை மேற்கொண்டனர்

நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் டாக்டர். எம்.கே. விஷ்ணுபிரசாத்திற்கு ஆதரவாக, தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க ஸ்டாலின் மு.க. ஸ்டாலின் கடலூரில் 05/04/2024 (வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் செய்ய உள்ளார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்-ஐ ஆதரித்து நேற்று இரவு திருவள்ளூர் எம்எல்ஏ ராஜேந்திரன் திருவள்ளூர் நகரம் வள்ளுவர்புரம் பகுதியில் இல்லம் தோறும் சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Sorry, no posts matched your criteria.