Tamilnadu

News March 31, 2024

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

image

ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம் பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சி புத்துக்கோயிலில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மு.ஊராட்சி மன்ற தலைவர் சீனன் மற்றும் நிர்வாகிகளுடன் ஜோலார்பேட்டை திமுக ஒன்றிய செயலாளர் கவுன்சிலர் க‌.உமாகன்ரங்கம் பாராளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்கள். உடன் ஒன்றிய பொருளாளர் திருப்பதி, சிவகுமார் கிளை செயலாளர் மணி முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

News March 31, 2024

வடை சுட்டு வாக்குகள் சேகரித்த பா.ம.க வேட்பாளர்

image

தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பா.ம.க வேட்பாளர் திலகபாமா ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட பாளையங்கோட்டை பகுதியில் தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கினார்.அப்போது அவர் சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் பணியாரம் மற்றும் வடை சுட்டு நூதன முறையில் மாம்பழ சின்னத்திற்கு பொதுமக்களிடையே இன்று வாக்கு சேகரித்தார். உடன் பா.ஜ.க மாவட்ட தலைவர் தனபாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 31, 2024

பெரம்பலூர் தேர்தல் களத்தில் 23 வேட்பாளர்கள்

image

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வரும் ஏப்ரல் 19 அன்று நடைபெறுகிறது. வெளியான இறுதி வேட்பாளர் பட்டியலின்படி திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேரு , அதிமுக வேட்பாளர் சந்திரமோகன், பாஜக வேட்பாளர் ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இளங்கோவன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி என 5 தேசிய/மாநில கட்சி வேட்பாளர் உட்பட 18 சுயேட்சை என மொத்தம் 23 வேட்பாளர் போட்டியிடுகின்றனர்.

News March 31, 2024

தண்ணீர் வாளியில் விழுந்து ஒரு வயது குழந்தை பலி

image

பல்லாவரம் அருகே திரிசூலம் லட்சுமணன் நகரைச் சேர்ந்தவர்கள் ராஜகுரு, காயத்ரி தம்பதியர். இவர்களுக்கு பிரணவ் ராஜ் என்ற 1 வயது ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் காயத்ரி வேலைக்கு சென்ற போது ராஜகுரு தனது குழந்தையுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் குழந்தை எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த தண்ணீர் வாளியில் விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 31, 2024

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 12 பேர் போட்டி

image

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 12 பேர் போட்டியிடுகின்றனர்.
முரசொலி (தி.மு.க.)
சிவநேசன் (தே.மு.தி.க)
முருகானந்தம் (பா.ஜனதா கட்சி)
ஜெயபால் (பகுஜன் சமாஜ் கட்சி)
ஹிமாயூன் கபீர் (நாம் தமிழர் கட்சி)
பொறி,அர்ஜூன் (சுயே)
எழிலரசன் (சுயே)
கரிகாலசோழன் (சுயே)
சந்தோஷ் (சுயே)
சரவணன் (சுயே)
செந்தில்குமார் (சுயே)
ரெங்கசாமி (சுயே)
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

News March 31, 2024

தூத்துக்குடி அருகே கோர விபத்து

image

சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் சேகர்.அவரது மனைவி நித்தியகலா,மகள் தீக்ஷித், மகன் ரித்திக் மற்றும் வனஜா,,கார்த்திக் ஆகியோர் காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து சென்னை திரும்பும் போது பழையகாயல் அருகே கார் எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியது. இதில் 6 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

News March 31, 2024

அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து அதிக அளவில் அண்ணாமலையார் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். இதனால் அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

News March 31, 2024

திருச்சி: 25 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

image

திருச்சி கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 25 நபர்களுடன் சட்ட விரோதமாக ஒன்று கூடி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தினர். மேலும், அனுமதி பெறாத வாகனங்களில் ஊர்வலமாக சென்று சட்டவிரோதமாக வாக்குகள் சேகரித்ததாக வேட்பாளர் ராஜேஷ், தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் பிரபு உள்ளிட்ட 25 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News March 31, 2024

மயிலாடுதுறையில் கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் தொடர்பான விவரங்களை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வாக்காளர் தொடர்பு மையம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தேவையான விபரங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News March 31, 2024

தேர்தலை புறக்கணிக்கும் பேனரால் பரபரப்பு    

image

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் சிங்காரக்கோட்டை ஊராட்சி S. பாறைப்பட்டியில் திமுக பிரமுகர்கள் மூவரின் அட்டூழியத்தால் நடைபெற இருந்த கோவில் திருவிழா தடை செய்யப்பட்டதால்  ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்து அப்பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு பேனரை வைத்துள்ளனர்.பேனர் வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!