India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கடலூர் தொகுதியில் கடந்த 27ஆம் தேதியுடன் முடிந்த வேட்புமனு தாக்கலில் 30 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 3, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 5, சுயேட்சைகள் 11 பேர் என தேர்தல் களத்தில் 19 வேட்பாளர்கள் உள்ளனர் என கடலூர் ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

திருவாரூர், கொல்லுமாங்குடி பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாகை வேட்பாளர் சுர்ஜித் சங்கரை ஆதரித்து இன்று மாலை 6 மணிக்கு வாக்கு சேகரிக்கவுள்ளார். இந்நிலையில் அதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்பணியினை முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் சங்கீதா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துவரிமான், விராட்டிபத்து, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆரணி அடுத்த பழங்காமூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் (57) இவர் சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் விரக்தி அடைந்த செல்லம்மாள் கடந்த 28 ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் இரயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (58). சொத்து பிரச்சினை காரணமாக முருகேசனை அவரது சித்தப்பா பேரன் மது மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து நேற்று அரிவாளால் வெட்டினர். இதில் தலை, முழங்கையில் பலத்த காயமடைந்த அவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்லை அடுத்த எரியோடு அருகே குண்டாம்பட்டி பெட்ரோல் பங்க் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குஜிலியம்பாறை அருகே உள்ள அழகப்பஉடையனூர் பகுதியை சேர்ந்த சண்முகவேல் என்பவர் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.1,39,000 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி வேடசந்தூர் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடியும், அவர்களுக்கு வாக்காளர் கையேட்டினை வழங்கியும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (மார்ச்.31) \விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சீர்காழியில் திருச்சபை மற்றும் வழிபாட்டு தலங்களிலிருந்து வழிபாட்டை நிறைவு செய்து வந்த பொதுமக்களிடம் அமைச்சர் மெய்ய நாதன், எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார். திமுக நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர் மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதா அறிமுகம் செய்து வைத்து வாக்குகள் சேகரித்தனர்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மதுபான விடுதியில் கடந்த 28 ஆம் தேதி மாலை முதல் மாடியின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது இச்சம்பவம் தொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விடுதி மேலாளர் சதீஸ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பின் விடுதி உரிமையாளர் அசோக் குமார் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ காங்கிரஸ்- திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தொடர்ந்து, அவர் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராபர்ட் குரூஸுக்கு ஆதரவாக வருகிற 6 ஆம் தேதி இரவு 7 மணிக்கு நெல்லையில் நடைபெறும் பொது கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுவார் என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.