India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி வசந்தம் நகரில் இன்று வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் காயமடைந்த மூன்று தொழிலாளர்கள் புதுச்சேரி அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை புதுச்சேரி ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

புதுவை காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் தனது கட்சியினருடன் புதுச்சேரி ஜீவா நகர் பகுதியில் திறந்த வாகனத்தில் இன்று மதியம் பிரச்சாரம் செய்தார். அப்போது வைத்திலிங்கம் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பதட்டமான சூழல் உருவானது. இதையடுத்து மற்ற நிர்வாகிகள் வைத்திலிங்கத்தை மீட்டு அருகில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றனர். 15 நிமிடம் ஓய்வெடுத்த வைத்திலிங்கம் மீண்டும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

நீலகிரி, குந்தா தாலுக்கா, மஞ்சூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர், மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று மாலை 3 மணியளவில் சென்றார். அப்போது அங்கு விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்கள். அதை பார்த்த வேட்பாளர் எல்.முருகன் மைதானத்தில் இறங்கி சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினார். இளைஞர்கள் அமைச்சருடன் படம் எடுத்துக்கொண்டனர்.

மரப்பாலம் பகுதியில் வசந்த் நகர் என்ற பகுதியில் வாய்க்கால்பணியின் போது இன்று விபத்து ஏற்பட்டது. இதில், 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், முதலியார்பேட்டை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணம் எதுவும் இன்றி வேலை செய்துள்ளனர். இதனையடுத்து கான்ட்ரக்டர் , சூப்பர்வைசர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கதிர்காமம் தொகுதியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் அறிமுக கூட்டம் தனியார் திருமண நிலையத்தில் இன்று நடந்தது. எம்எல்ஏ கேஎஸ்பி. ரமேஷ் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி, பேசியதாவது. புதுவையில் மக்கள் நல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதனால் தைரியமாக மக்களிடம் வாக்கு கேட்கலாம். மேலும் 80 முதல் 90 சதவித வாக்குகள் நமக்கு வர வேண்டும் என தெரிவித்தார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் பள்ளிகளுக்கு இடையிலான தேசிய தடகளப் போட்டி வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இப்போட்டியில் திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம் பள்ளியில் பயிலும் மாணவன் ஜித்தின் அர்ஜுனன் 100 மீட்டர், 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல்
ஆகிய 3 போட்டிகளிலும்
பங்குபெற உள்ளார். மாணவனை பள்ளி நிர்வாகம் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

தூத்துக்குடி தொகுதியில் ராணுவம், துணை ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று 2,750 பேருக்கு தபால் வாக்கு அளிப்பதற்கான லிங்க் மாவட்ட தேர்தல் அதிகாரியால் அனுப்பப்பட்டுள்ளது. அந்த லிங்க் மூலம் தனது வாக்கினை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம், சின்னவேப்பம்பட்டு ஊராட்சிமன்ற தலைவர் சேகரின் தந்தை ரேணு இன்று வயது முதிர்வு காரணமாக காலமானார். இந்நிலையில், ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜி நேரில் சென்று மாலை வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதில்
மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இண்டியா கூட்டணியின்
கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் விஷ்ணுபிரசாதிற்கு ஆதரவாக திமுக சார்பில் கடலூரில் இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின்
மாநில நிர்வாககுழு உறுப்பினர் மற்றும்
மாநகர அமைப்பு குழு தலைவர் தி. கண்ணன் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இளைஞர் பிரிவினர் திரளாக கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிரிக்கெட் வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடி அவர்களுக்கு வாக்காளர் கையேட்டினை வழங்கி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Sorry, no posts matched your criteria.