Tamilnadu

News April 3, 2024

சிவகங்கை: வாக்குக்கு பணம் வாங்கினால் சிறை 

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே வாக்களிப்பதற்கு எந்தவொரு நபரும் ரொக்கமாகவோ அல்லது பொருளாகவோ லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ஆஷா அஜித் நேற்று எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News April 3, 2024

விழுப்புரம்: விசிக வேட்பாளருக்கு தீவிர வாக்கு சேகரிப்பு

image

விழுப்புரம் பகுதிகளில் திமுக கூட்டணியின் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விசிக வேட்பாளர் துரை. ரவிக்குமாருக்கு இன்று (ஏப்ரல் 3) காலை நடைப் பயிற்சியின்போது மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செ.புஷ்பராஜ் பானை சின்னத்திற்கு பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

News April 3, 2024

தஞ்சாவூர்: அழைப்பிதழ் வழங்கி விழிப்புணர்வு

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்.19ம் தேதி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து, தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாபநாசத்தில், திருமண அழைப்பிதழ் போன்று பத்திரிகை அச்சடித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன், தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்து வருகின்றனர்.

News April 3, 2024

மயிலாடுதுறை: அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி

image

மயிலாடுதுறை நகரத்திற்குட்பட்ட கீழ நாஞ்சில் நாடு பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜ் தலைமையில் அதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட இளைஞரணி செயலாளர் நான்கில் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News April 3, 2024

திருச்சி: நா.த.க பரப்பும் புதிய பிரச்சாரம்!

image

நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷை ஆதரித்து திருச்சி முழுவதும் அதன் நிர்வாகிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நோட்டீஸ் வழங்குதல், திண்ணைப் பிரச்சாரம் ஆகியவற்றை கடந்து தற்போது வாட்ஸாப் மூலம் “ஸ்டாப் ABCD” அதிமுக, பிஜேபி, காங்கிரஸ், மற்றும் திமுக, வேறு எந்த கட்சிகளும் வேண்டாம் நாம் தமிழர் கட்சிக்கே உங்கள் ஆதரவு என்று பரப்பி வருகின்றனர்.

News April 3, 2024

வேலூர் கோட்டையில் முதல்வர் பிரச்சார பொதுக்கூட்டம்

image

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து வேலூர் கோட்டை மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 2) நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினார். இதில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

News April 3, 2024

 திருச்சி: தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை?

image

திருச்சி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளதையடுத்து தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார். புதுகை- திருச்சி மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் 100 % வாக்களிக்கும் வகையில் அன்றைய தினம் அனைத்து நிறுவனங்களும், தேர்தல் அன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

News April 3, 2024

குமரியில் 10 மணி வரை மழை!

image

நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று(ஏப்.3) காலை 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்களில், காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக, இன்று தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News April 3, 2024

மயிலாடுதுறை: சிறுத்தை விவகாரம்..விடுமுறை

image

மயிலாடுதுறை அருகே செம்மங்குளம் பகுதியில் இன்று (ஏப்.3) சாலையில் சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அங்குள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அளித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து சிறுத்தை குறித்து தகவல் தெரிந்தால் 9360889724 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை காவல்துறை தெரிவித்துள்ளது.

News April 3, 2024

நெல்லையில் மழைக்கு வாய்ப்பு

image

நெல்லை மாவட்டத்தில் இன்று (ஏப்.3) காலை 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்களில், காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக, இன்று தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!