Tamilnadu

News April 3, 2024

உரிமை தொகையை நிறுத்தினால் சும்மா விடமாட்டேன்- இபிஎஸ் 

image

சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி இன்று பேசுகையில், சுவரில் சின்னம் வரைய அனுமதிக்கவில்லை என்றால் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிடுவோம் என திமுகவினர் மிரட்டுவதாக பொதுமக்கள் கூறிவருகின்றனர். உரிமைத் தொகையை நிறுத்தினால் சும்மா விட மாட்டேன். திமுகவின் தில்லுமுல்லுவை அதிமுகவினர் முறியடிக்க வேண்டும் என்றார்.

News April 3, 2024

நடிகர் கருணாஸ் பிரச்சாரத்தில் சலசலப்பு

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் நவாஸ் கனிக்கு ஆதரவாக இன்று பரமக்குடி அருகே நயினார் கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட அக்கிரமேசி கிராமத்தில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் பொதுமக்களிடையே தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது எடப்பாடி குறித்து பேசுகையில் கிராம மக்களுக்கும் கருணாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சலசலப்பு ஏற்பட்டது.

News April 3, 2024

சென்னையில் குடிநீர் தேவை அதிகரிப்பு 

image

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. சென்னைக்கு தினமும் 1000 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. 2021-ம் ஆண்டு முதல் இந்த அளவிலேயே குடிநீர் தேவை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி 1073 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவையாக அதிகரித்துள்ளது. 

News April 3, 2024

நெல்லையில் பைக்குக்கு மேற்கூரை

image

திருநெல்வேலி மாவட்டத்தில் தற்பொழுது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சுட்டெரிக்கும் இந்த வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க நெல்லையை சேர்ந்த நபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு மேற்கூரை அமைத்து அசத்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது நெல்லையில் வைரலாகி வருகின்றது.

News April 3, 2024

புதுவையில் 20 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

image

புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் முதல்வர் ரங்கசாமி பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், சேதராப்பட்டில் தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டு 20 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். எனவே தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என ரங்கசாமி கூறினார்.

News April 3, 2024

ஆற்காடு அருகே ரூ.1.66 லட்சம் பறிமுதல்

image

ஆற்காடு நிலை கண்காணிப்பு குழு அலுவலர் தியாகராஜன் தலைமையிலான குழுவினர் இன்று ஆற்காடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற வாலிபர் ஒருவரை நிறுத்தி சோதனை செய்ததில், அவரிடம் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் பணம் இருந்தது. அப்பணத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அருள் செல்வத்திடம் ஒப்படைத்தனர்.

News April 3, 2024

பணம் பறிப்பு – கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

image

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் சந்தோஷ்(36). மருத்துவரான இவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 1ஆம் தேதி ஜிம்முக்கு செல்வதற்காக ஈசிஆர் சாலையில் நடந்து சென்ற இவரிடம் பணத்தைப் பறித்து தப்பி ஓடிய கல்லூரி மாணவர்கள் நசீர்பாஷா, சாம்பசிவம், கீர்த்தி வாசன் ஆகிய மூன்று பேரை கோட்டக்குப்பம் போலீசார் இன்று கைது செய்தனர்.

News April 3, 2024

மாட்டு வண்டியில் தேர்தல் பிரச்சாரம் 

image

காஞ்சிபுரம் அடுத்த மேல்ஒட்டிவாக்கம் கிராமத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கிராமம் முழுவதும் மாட்டு வண்டியில் பிரச்சாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு தீவிரவாக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

News April 3, 2024

திருவாரூரில் ராணுவ அமைச்சர் பிரச்சாரம்

image

வரும் ஏப்ரல். 8ஆம் தேதி ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் நாகை மக்களவை பாஜக வேட்பாளர் ரமேஷை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்திற்கு திருவாரூக்கு வருகை தரவுள்ளார். இந்நிலையில், திருவாரூரில் அதற்கான முன்னேற்பாடுகள் பாஜக சார்பில் செய்யப்பட்டு வரும் நிலையில், ராஜ்நாத்சிங் உரை நிகழ்த்த உள்ள இடத்தினை பாஜக மாவட்ட தலைவர் தேர்தல் பணிக்குழு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

News April 3, 2024

மதுரை: திமுக எம்எல்ஏ மீது சகோதரி புகார்

image

திருப்பரங்குன்றம் பேரூராட்சி முன்னாள் சேர்மன் காந்திமதி கல்குவாரி நடத்தி வருகிறார். தனது குவாரிக்கு அருகே மதுரை வடக்கு எம்எல்ஏவும், காந்திமதியின் சகோதரரான தளபதியும் குவாரி அமைக்க இருப்பதை அறிந்து சகோதரரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது அவரது குடும்பத்தினர் தாக்கியதாக 3 பேர் மீது காவல் நிலையத்தில் காந்திமதி புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!