Tamilnadu

News April 3, 2024

நாமக்கல் பேருந்து உரிமையாளர் வீட்டில் ஐடி சோதனை

image

நாமக்கல் மாவட்ட காந்தி நகரில் தனியார் கல்வி நிறுவன பங்குதாரரும், பேருந்து உரிமையாளருமான சந்திரசேகர் வீட்டில் ஐடி சோதனை இன்று 03.04.2024 நடைபெற்று வருகிறது. தேர்தl சமயம் என்பதால் இவரது வீட்டில் பட்டுவாடா செய்ய பணம் பதுக்கப்பட்டுள்ளதா ? என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

News April 3, 2024

நெல்லை வாராந்திர சிறப்பு ரயில் வரும் மே.27 வரை நீட்டிப்பு

image

தென்னக ரயில்வே சேலம் கோட்டம் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், நெல்லையில் இருந்து ஞாயிறன்று இரவு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை திங்களன்று மேட்டுப்பாளையம் சென்றடையும். அதேபோல் திங்களன்று இரவு புறப்பட்டு மறுநாள் செவ்வாயன்று நெல்லையை சென்றடையும். இந்த சிறப்பு வாராந்திர ரயில் வரும் மே.27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 3, 2024

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில், இன்று இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டார். இதில், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

News April 3, 2024

திருச்சி மாநகராட்சி ஆணையர் ஆய்வு

image

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம் 1, வார்டு 15, சஞ்சீவி நகரில் சமுதாய கூடத்தில், மாநகராட்சி ஆணையர் சரவணன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு சுகாதாரம் குறித்து ஆய்வு செய்த ஆணையர் பராமரிப்பு குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தேவதானம் நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்தார்.

News April 3, 2024

திருவண்ணாமலையை வாட்டி எடுத்த வெயில்

image

திருவண்ணாமலை மாவட்டம் சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகபட்சமாக 100.04 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியிருக்கிறது. இதன் அளவு டிகிரி செல்சியஸில் 38 டிகிரி செல்சியஸ் ஆகும். சுட்டெரித்த வெயிலின் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிக்குள்ளாகினர். இதனால் மக்கள் வெயிலில் செல்ல தயங்குகின்றனர்.

News April 3, 2024

100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு

image

வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் தனியார் கல்லூரி முதல்நிலை வாக்காள மாணவர்களுக்கு 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வந்தவாசி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவா, வட்டாட்சியர் பொன்னுசாமி, தேர்தல் துணை வட்டாட்சியர் சதீஷ், பூங்குயில் சிவக்குமார், ரெட் கிராஸ் சங்கம் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

News April 3, 2024

நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட பள்ளிகளின் விவரம்

image

மயிலாடுதுறை ரயிலடி தெருவில் உள்ள விஜய் பள்ளி மற்றும் கூறைநாடு பகுதியில் உள்ள தொல்காப்பியர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, அறுபத்துமூவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, செவன்த் டே நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, அழகு ஜோதி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, ராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி, பால சரஸ்வதி பள்ளி உள்ளிட்ட 7 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

News April 3, 2024

திண்டுக்கல்லில் பிரபல நடிகை பிரச்சாரம்

image

கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியில் திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து நடிகை ரோகிணி திமுக ஆட்சிகாலத்தில் செய்து முடித்த திட்டங்களை ம‌க்க‌ளுக்கு எடுத்துரைத்து தீவிர‌ பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிக‌ழ்வில் காங்கிர‌ஸ், ம‌னித‌ நேய‌ம‌க்க‌ள் க‌ட்சி ம‌ற்றும் விடுத‌லை சிறுத்தைக‌ள் க‌ட்சியின் முக்கிய‌ பொருப்பாளர்க‌ளும், உறுப்பின‌ர்க‌ளும் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

News April 3, 2024

மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

image

சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை, செம்மங்குளம் பகுதியை சேர்ந்த ஏழு பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஏப்ரல் 4ஆம் தேதி விடுமுறை என ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்பு துறை, வனத்துறை பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

News April 3, 2024

திண்டுக்கல்: சரக்கு பாட்டிலுக்கு தமிழ் பெயர்

image

பழனி புஷ்பத்தூர் பாமக வேட்பாளர் திலகபாமா வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபட்டார். தமிழ்நாட்டில் திமுக அரசு சரக்கு பாட்டிலுக்கு வீரன் என்று தமிழ் பெயர் வைக்கிறது. பிரதமர் மோடி திருக்குறளை உலக அரங்கில் எடுத்துக் கூறி தமிழை வளர்க்கிறார். பிரதமர் யார் என்பதே தெரியாமல் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வாக்கு சேகரிக்க வருபவர்களை நிராகரிப்பு செய்யுங்கள் என தெரிவித்தார்.

error: Content is protected !!