Tamilnadu

News April 4, 2024

திருச்சியில் நகை பணம் கொள்ளை

image

திருச்சி உறையூர் ராமலிங்க நகர் 5வது குறுக்கு தெருவை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ராஜேஷ் (31). இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டு நேற்று மாலை வந்த போது வீட்டின் பூட்டு திறந்து பீரோவிலிருந்த 4பவுன் தங்க நகைகள், ரூ.28ஆயிரத்தைத் திருடியது தெரியவந்தது. இதையறிந்த உறையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார்கள்.

News April 4, 2024

நாமக்கல்: கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்

image

நாமக்கல்லில், கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நாமக்கல் மாவட்ட மையம் சாா்பில், கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் ஏப்.1 முதல் ஜூன் 3 வரையில் நடைபெறவுள்ளது. அனைத்து வயதினரும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

News April 4, 2024

கோடை நீச்சல் பயிற்சி அறிவிப்பு

image

மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு : பாளை அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் குளம் மற்றும் சீவலப்பேரி ரோடு கக்கன் நகர் நீச்சல் குளங்களில் 5 பிரிவுகளாக 12 நாட்கள் வீதம் ஏப்ரல் மே மாதங்களில் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி கட்டணம் ரூ.1770 . மேலும் விவரங்களுக்கு 74017 03506 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News April 4, 2024

மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை

image

சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை, செம்மங்குளம் பகுதியை சேர்ந்த ஏழு பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஏப்ரல் 4ஆம் தேதி விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்பு துறை, வனத்துறை பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

News April 4, 2024

ஈரோடு: வரவு செலவு ஒத்திசைவு கூட்டம்

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அல்லது வேட்பாளரின் முகவர் ஆகியோர் தங்களது தேர்தல் வரவு செலவு கணக்கு ஒத்திசைவு கூட்டமானது இன்று (4ம் தேதி) நடைபெற உள்ளது. இதற்கு தேர்தல் செலவின பார்வையாளராக லட்சுமி நாராயணா முன்னிலை வகிக்க உள்ளார் என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News April 4, 2024

செங்கல்பட்டு: தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கலெக்டர் ஆய்வு

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட லோக்சபா மற்றும் ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதி தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு மையம் உள்ளது. இங்கு 24 மணிநேரமும் தேர்தல் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நேற்று கலெக்டர் அருண்ராஜ், தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

News April 4, 2024

அரியலூர்: திருமாவளவன் வாக்கு சேகரிப்பு

image

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் குன்னம் சட்டமன்ற தொகுதி, ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம், காரை ஊராட்சியில், புதுக்குறிச்சி, மலையப்ப நகர், சமத்துவபுரம், காரை, ஆகிய கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து நேற்று (3.4.2024) பானை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.

News April 4, 2024

திருச்செந்தூரில் இன்று மறு வாக்கு எண்ணிக்கை

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் ராஜேஸ்வரன் என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் முரளி என்பவர் தோல்வியுற்றார். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் இன்று மறுவாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News April 4, 2024

முதல்வருக்கு நினைவு பரிசு

image

திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற திமுக வேட்பாளர்கள் சி.என்.அண்ணாதுரை மற்றும் எம்.எஸ்.தரணிவேந்தனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் எ.வ.வேலு நினைவுப் பரிசினை வழங்கினார். இதில், அமைச்சர் மஸ்தான், சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, டாக்டர் எ.வ.வே.கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், ஜோதி, அம்பேத்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

News April 4, 2024

நீரில் சிக்கிய காட்டு மாடு மீட்பு

image

கடந்த சில தினங்களாக கொடைக்கானல் ஏரிச்சாலை, அண்ணாசாலை, மூஞ்சிக்கல் ஆகிய பகுதிகளில் காட்டு மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. இந்த நிலையில் கொடைக்கானல் அருகேயுள்ள குறிஞ்சி நகா் பகுதியில் காட்டுமாடு ஒன்று நீருற்றுக்குள் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற வனத் துறையினா் பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி மாட்டை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனா்.

error: Content is protected !!