Tamilnadu

News April 4, 2024

அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த கழக நிர்வாகிகள்

image

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர்
ஜெ. பாக்யராஜ்-க்கு விழுப்புரம் நகரம் 41வது வார்டு கழக செயலாளர் M.R. கிருஷ்ணன் தலைமையில் இன்று
( ஏப்ரல் 4 ) வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகளை சேகரித்தனர். உடன் அதிமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

News April 4, 2024

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

image

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காமாட்சிப்பட்டியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் மாவட்ட செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன், மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

News April 4, 2024

உறுதிமொழி எடுத்த கல்லூரி மாணவர்கள்

image

100% வாக்களிக்க வேண்டி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறிப்பாக என் வாக்கு என் உரிமை என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பாளை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் பிரபல தனியார் தொலைக்காட்சி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 4) நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

News April 4, 2024

சென்னை: 80,377 விளம்பரங்கள் அகற்றம்

image

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட மக்களவைத் தொகுதிகளில் தோ்தல் நடத்தை விதிமுறைகளின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில், கடந்த 18 நாள்களில் மட்டும் பொது இடங்களில் விதிகளை மீறி ஒட்டப்பட்ட 63,482 சுவா் விளம்பரங்கள், 14,237 சுவரொட்டிகள்,608 பதாகைகள், 2,050 இதர வகை விளம்பரங்கள் என மொத்தம் 80,377 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News April 4, 2024

சாதனை சிறார்களுக்கு எஸ்பி பாராட்டு

image

கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை 30 கிமீ தூரத்தை 9 வயது சிறுமி தாரகை ஆராதனா, 7 வயது சிறுவன் நிஷ்விக் ஆகியோர் இடைவிடாமல் நீந்திக் கடந்தனர். சாதனை புரிந்த இருவரையும் ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் இன்று பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

News April 4, 2024

மதுரையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக பேரணி

image

மதுரையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் ஓட்டளிப்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் வாகன ஊர்வலம் நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலத்தில் திரளான மாற்றுத்திறனாளிகள் டூவீலர்களில் பங்கேற்றனர்.ஊர்வலம் மேலுார் ரோடு, மாநகராட்சி அலுவலகம்,தல்லாகுளம் வழியாக தமுக்கத்தை அடைந்தது.கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா,மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்

News April 4, 2024

மே 22, 23, 24 ஆம் தேதிகளில் தெப்பத் திருவிழா

image

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்குகிறது. ஆழித்தேரோட்டத்துக்குப் பிறகு கமலாலய குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும். அந்த வகையில், திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலின் நிகழாண்டு மே 22, 23, 24 ஆம் தேதிகளில் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது. தெப்பத்தில் நடைபெறும் இன்னிசைக் கச்சேரி குறித்தும் கோயில் நிா்வாகம் சாா்பில் பின்னா் அறிவிக்கப்பட உள்ளன.

News April 4, 2024

தேவகோட்டை அருகே லாரி மீது வேன் உரசி சிலர் படுகாயம்

image

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஆறாவயல் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான காட்டன் மில் உள்ளது பணிபுரியும் பணியாளர்களை கிராமங்களில் அழைத்தவர் வழக்கம் அதேபோல் இன்று விளாங்காட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏற்றிக்கொண்டு வரும்பொழுது நெடுஞ்சாலையில் ராமேஸ்வரம் நோக்கியா அரிசி முட்டைகள் ஏற்றிக்கொண்டு வந்த லாரியில் உரசி வேன் கவர்ந்தது பயணித்தவர்கள் காயம் அடைந்தனர். 

News April 4, 2024

இளைஞர்களுக்கு வாக்குறுதி அளித்த பாஜக வேட்பாளர்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்.4) அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது நயினார் நாகேந்திரனிடம் அப்பகுதி இளைஞர்கள் வேலைவாய்ப்பு செய்து தரும்படி கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் மீது நான் வெற்றிபெற்றால் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வேன் என வேட்பாளர் நயினார் இளைஞர்களிடம் வாக்குறுதி அளித்தார்.

News April 4, 2024

சேலம்: ரூ.1.88 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள்

image

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது முதல் சேலம் மாவட்டத்தில் நேற்று(ஏப்.3) வரை நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் பறக்கும் படையினர் மூலம் ரூ.1.88 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சேலம் மாவட்டத் தேர்தல் அலுவலரும், சேலம் மாவட்ட ஆட்சியருமான டாக்டர். பிருந்தாதேவி தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!