Tamilnadu

News April 4, 2024

வேலூர்: தமிழக, ஆந்திர போலீசார் ஆலோசனை

image

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் இன்று ( ஏப்ரல் 4) ஆந்திரா, தமிழக போலீசார் இணைந்து தேர்தலின் போது எவ்வித அசம்பாவிதமும் நடைப்பெறாமல் இருக்க மாநில எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்துதல், பணம் பரிமாற்றம் மற்றும் பரிசு பொருட்கள், கடத்துவதை தடுப்பது பற்றி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

News April 4, 2024

ரூ.1.88 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்

image

2024 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது முதல் சேலம் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 03) இரவு வரை நடைபெற்ற நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் பறக்கும் படையினர் சோதனை மூலம் ரூபாய் 1.88 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டாக்டர். பிருந்தாதேவி தகவல் தெரிவித்தார்.

News April 4, 2024

சேலம்: விடிய விடிய கலெக்டர் ஆய்வு

image

2024 மக்களவை பொதுத் தேர்தலையொட்டி, சேலம் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று நேற்று(ஏப்.3) இரவு முழுவதும் விடிய விடிய மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி ஆய்வு மேற்கொண்டார். இதில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News April 4, 2024

திண்டுக்கல் : ஏப்ரல் 5 இலவச பயிற்சி ஆரம்பம்

image

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மெயின் ரோடு சிறுமலை பிரிவில் அமைந்துள்ள கனரா ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் நாளை (ஏப்ரல் 5) முதல் இலவச கணினி பயிற்சி ஆரம்பமாகிறது. இதற்கு முன்பதிவு செய்து விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றவர்கள் மேற்குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் பயிற்சியில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

News April 4, 2024

மாவட்ட தேர்தல் அலுவலர் விழிப்புணர்வு

image

தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதனையடுத்து புதுக்கோட்டை போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக பதட்டமான வாக்குசாவடிகளை கண்டுபிடித்து அதற்கு எவ்வாறு பாதுகாப்பு அளிப்பது குறித்து ஆலோசனை செய்தனர்.

News April 4, 2024

அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

image

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சந்திரகாசன் இன்று சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது உடன் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் முன்னாள் எம்எல்ஏ முருகுமாறன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் அதிமுக நிர்வாகிகள் ஒன்றிணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

News April 4, 2024

கோவை: வேட்பாளர்கள் கவனத்திற்கு

image

கோவையில் வேட்பாளர்கள் தனியார் கட்டடங்களிலோ அல்லது வாகனங்களிலோ ஸ்டிக்கர் ஒட்டும்போது , அதன் உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று, ஒப்புதல் கடிதம் பெற வேண்டும். அதை 3 நாட்களுக்குள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். மீறினால் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கருதி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் கிராந்தி இன்று தெரிவித்துள்ளார்.

News April 4, 2024

கரூரில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மாதிரி தேர்வு

image

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நேற்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 (வி.ஏ.ஓ.) போட்டி தேர்வுக்கான மாதிரி தேர்வு மாவட்ட மைய நூலகத்தில் 64 பேரும், குளித்தலை முழுநேர கிளை நூலகத்தில் 30 பேரும், கிருஷ்ணராயபுரம் முழுநேர கிளை நூலகத்தில் 19 பேரும். அரவக்குறிச்சி முழுநேர கிளை நூலகத்தில் 8 பேரும், தோகை மலை ஊர்ப்புற நூலகத்தில் 10 பேரும் என 131 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர்

News April 4, 2024

திருப்பத்தூரில் மாரத்தான் போட்டி

image

100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 3 கி.மீ மாரத்தான் போட்டி வரும் ஏப்.6ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெறும் இந்த போட்டியை ஆட்சியர் தொடங்கி வைக்கவுள்ளார். இந்த மாரத்தான் போட்டியில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News April 4, 2024

களையிழந்த அய்யலூர் வார சந்தை

image

திண்டுக்கலில் புகழ்பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. இதனால் திண்டுக்கல் மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்க அதிகளவில் சந்தைக்கு வருகின்றனர்.  இன்று அதிகாலை சந்தை கூடியது ரம்ஜான் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் தேர்தல் விதிமுறையால் வழக்கத்தைக் காட்டிலும், விவசாயிகளும் வியாபாரிகளும் மிகவும் குறைவாக வந்திருந்தனர்.

error: Content is protected !!