India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்.4) அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது நயினார் நாகேந்திரனிடம் அப்பகுதி இளைஞர்கள் வேலைவாய்ப்பு செய்து தரும்படி கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் மீது நான் வெற்றிபெற்றால் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வேன் என வேட்பாளர் நயினார் இளைஞர்களிடம் வாக்குறுதி அளித்தார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது முதல் சேலம் மாவட்டத்தில் நேற்று(ஏப்.3) வரை நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் பறக்கும் படையினர் மூலம் ரூ.1.88 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சேலம் மாவட்டத் தேர்தல் அலுவலரும், சேலம் மாவட்ட ஆட்சியருமான டாக்டர். பிருந்தாதேவி தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை சிஎஸ்ஐ தேவாலயத்தில் நடைபெற்ற சம்பவத்தில், கைது செய்யபட்ட கிறிஸ்தவ பாதிரியார்கள் இருவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இன்று (ஏப்ரல்.04) சந்திக்க பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூருக்கு இப்ராஹிம் கோவை மத்திய சிறைச்சாலைக்கு வந்தார். மேலும் சிறையில் அவர்களை சந்தித்து இச்சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

ஈரோடு தொகுதியில் 2201 முதியவர்களும், 800 மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். விருப்பம் தெரிவித்த 3001 பேரிடம் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏப்.6 வரை 3 நாட்களுக்கு காலை 7மணி முதல் மாலை 6மணி வரை வீடு வீடாகச் சென்று தபால் வாக்கு சேகரிக்கப்பட உள்ளது. தபால் வாக்குகளை செலுத்த முடியாதவர்களுக்கு ஏப்.8 ஆம் தேதி மீண்டும் ஒருமுறை வாய்ப்பு வழங்கப்படும்.

சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை, செம்மங்குளம் பகுதியை சேர்ந்த ஏழு பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஏப்ரல் 4ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் உள்ள நிலையில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள், குழந்தைகள் வெளியே வர வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளை ஆதரித்து திரைப்பட நடிகர் வையாபுரி மண்டபம் ஒன்றியத்திற்குட்பட்ட உச்சிப்புளியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மாநில எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ஆர்.ஜி.ரெத்தினம், மாவட்ட இணை செயலாளர் கவிதா, மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜானகிராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் நவாஸ்கனியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் பரப்புரை மேற்கொள்ள ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த
முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸை ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ வரவேற்றார்.

திமுக தலைமையிலான இந்திய கூட்டணியின் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து இன்று புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ,வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே.கே செல்லபாண்டியன், புதுகை எம்எல்ஏ வை.முத்துராஜா, மாநகரக் கழக செயலாளர் ஆ.செந்தில் மற்றும் திமுக நிர்வாகிகள் தீப்பெட்டி சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில், 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி அமைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட் மையத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கே.எம். சரயு மற்றும் கூடுதல் ஆட்சியர் / ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வந்தனா கர்க் ஆகியோர் நேற்று வேளாண் கல்லூரி மாணவ, மாணவியருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் இன்று (ஏப்.4) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியே இயக்கப்படும் திருநெல்வேலி- மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் மாா்ச் மாதம் இறுதி வரை இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை வருகின்ற மே 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.